பக்கம்:ஆண்டாள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஆண்டாள்


களால் உள்ளக் கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் சமய உணர்ச்சியே பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது' என்று வருணிக்கின்றார் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள்' (தமிழ் விருந்து, பக். 143-146)

வைணவம்

வைதீக மதத்தின் ஒரு பிரிவு வைணவம். அச்சமயக் கடவுள் திருமாலின் வழிபாடு வேதகாலத்திற்கு முந்தியது. இந்திய நாடு முழுவதும் பரவி. அருந்தத்துவங்களை உள்ளடக்கி நம் ஆன்மீக, சமூக வளர்ச்சிக்கு இச்சமயம் சிறந்த தொண்டு புரிந்துள்ளது. வேதகால விஷ்ணுவும் தொல்காப்பியம் காட்டும் திருமாலும் ஒரே கடவுளராவர்.

திருமால் அல்லது மகாவிஷ்ணு நான்கு மறைகளிலும் கூறப்பெற்ற வேதகாலக் கடவுளே, அவனைச் சூரியனாகவும் மூவுலகையும் ஈரடியால் அளந்தவன் என்றும் நூல்கள் பகரும். சதபதப்ராம்மணத்தில் அவன் பன்னிரண்டு ஆதித்தர்களில் ஒருவனாகக் கூறப்பட்டுன்ளான். மகாபாரதமும் பதினொரு ஆதித்தனைக் கூறிப் பன்னிரண்டாவதாக விஷ்ணுவைக் குறிக்கின்றது. இதனால் ஆதித்தனே விஷ்ணுவாக மாறியிருத்தல்கூடும் என்று ஊகிக்க இடமுண்டு. இதே விஷ்ணு யக்ஞ ஸ்வரூபம் என்றே மறைகளாற் புகழப்பட்டு, அம்முறையில் யக்ஞ நாராயணன் வடிவில் வணங்கப்பட்டு வருகின்றான். இதிகாச புராணங்களில் விஷ்ணுவே பரதேவதையாகவும், திருமூர்த்திகளில் ஒருவனாகவும் காணப்படுகின்றான்.

என்று டி. ஏ. கோபிநாதராவ் கூறியிருக்கின்றார்." (இந்திய விக்ரகம்.)

"மேற்கூறியவற்றால் விஷ்ணு ஆரியக் கடவுள் எனத் தெரிகின்றது. அவ்வாறிருந்தும் அவன் திருநாமங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/18&oldid=723339" இலிருந்து மீள்விக்கப்பட்டது