பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 125

'அப்படி முடிவு பண்ண, இப்ப என்ன அவசரம் வந்ததுன்னுதான் கேட்கிறேன் நான்...'

密哆 x 3

a * * * * * *

"என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்திங்கன்னா, நான் விட்டிருக்க மாட்டேன்."

ஆத்மாவோடு ஆத்மாவாகக் கலந்து உறவு கொண்டு விட்டவளைப் போல இவ்வளவு ஒட்டுதலாக அவளால் எப்படிப் பேச முடிகிறதென்று மனத்துக்குள் வியந்தான் ராஜாராமன், ஆனால் அவள் அப்படிப் பேசியது அவனுக்கு

மிகவும் இதமாக இருந்தது. < * . . . .

  • . * *

தெ ாடர்ந்து சில நாட்களாக ராட்டு நூற்கவும் படிக்கவும் எண்ணினான். அவன். எனவே, நாலைந்து நாட்கள் தொடர்ந்து அவன் வேறெங்கும் வெளியே சுற்றவில்லை; வாசகசாலையிலேயே தங்கிப் புத்தகங்கள் படித்தான். மதுரத்தின் அன்பும் பிரியமும் நிறைந்த உபசரிப்பு அவனைச் சொர்க்க பூமிக்குக் கொண்டு போயிற்றெனவே சொல்ல வேண்டும். அந்த அன்புமயமான நாட்களில் ஒரு நாள் மாலை தன் தாய் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கேயே வீணையை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஒரு மணி நேரம் வீண்ை வாசித்தாள் மதுரம். அந்த இசை வெள்ளத்தில் அவன் மனம் பாகாய் உருகியது. எதிரே சரஸ்வதி தேவியே ஒரு வசீகரவதியாகி வந்தமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பதுபோல் அவனுக்குக் காட்சியளித்தாள் அவள். * -

மறுபடி வீடு நில விற்பனை ரிஜிஸ்திரேஷனுக்காக அவன். மேலுனர் புறப்படுவதற்கிருந்த தினத்துக்கு முந்திய தினத்தன்று காலையில் பிருகதீஸ்வரனின் பதில் கடிதம் அவனுக்குக் கிடைத்தது. வருட ஆரம்பத்தில் மோதிலால் நேரு மரண மடைந்த செய்தி தன் மனத்தைப் பெரிதும்