பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஆத்மாவின் ராகங்கள் அவர்களுக்கு அளித்த மகாத்மாவும் இந்தக் கதையில்

வருகிறார்கள். அவர்கள் எல்லாரும் வருகிற கதையில்

சாந்தமும் சத்தியமுமே நிரம்பியிருக்கட்டும். பல இடங்களை ஒரு கதையாகவே சித்தரித்து விட்டீர்கள். சில இடங்களில்

மட்டும் அதற்கு விதிவிலக்காகக் கெட்டவர்களைப் பற்றிய

உண்மைகளைச் சொல்வானேன்? அதை விட்டுவிட்டாலும்

இதன் சுவை குறையாது! இந்தக் கதைக்கு வில்லன்களே

வேண்டாம். -

நான் அதற்கு ஒப்புக்கொண்டு அப்படியே செய்து விட்டேன். காந்திராமனோடு பழகிய முத்திருளப்பன் காந்தி ராமனைவிட வயது மூத்தவராயிருந்தும், அவரையே தமது குருவாகக் கருதினார். கண்களில் ஒளி மின்ன மின்ன அவரைப் பற்றிப் பேசினார்:

'எங்களை இந்த நோன்பில் ஈடுபடுத்தியவனே அவன் தான்! எத்தனையோ சோர்வான வேளைகளில் அவனுடைய புன்னகையே எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் எல்லாம் ரொம்பப் பிற்காலத்தில் இங்கு வந்து பழகினர்கள். வடக்குச் சித்திரை வீதித் திலகர் தேசிய வாசகசாலை மாடியில் ஒரே பாயில் படுத்த நாளிலிருந்து அவனோடு பழகியிருக்கேன் நான். அவனைப் போல் விசாலமான மனசு படைச்சவனை இனிமே எப்பப் பார்க்கப் போறேன்னே தெரியலே. நினைச்சதைச் சாதிச்சு முடிக்கிற மனோபலம் அவனுக்குண்டு. மதுரம் போனப்போ அந்த திட மனத்தையும் இழந்து தவிச்சான் அவன். பல விதத்தில் அவன் தேசபக்திக்கு அவள்தான் தூண்டுதல். அவளுடைய பிரியம்தான் அவனைப் பல சாதனைகளுக்குத் தூண்டியதுன்னு சொல்லணும். ஜமீன் குடும்பத்தை, நான் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நல்ல வங்களா மாற்றி எழுதியிருக்கீங்க. ஜமீன்தார் காலமானப்ப அந்த ஜமீன்தாரிணி அம்மா சும்மா இருந்தாலும், வாரிசுங்க - மாந்தோப்பு மதுரத்துக்குப் பாத்தியதை ஆக முடியாதுன்னு - மைனர் லிட்டிகேஷன் சூட்போட்டு வதைச்சாங்க. கேட்கிறவங்க பேச்சைக் கேட்டுக் கொஞ்சநாள் ஆட்டமா