பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி f 45

பானர்ஜியை அடித்துத் தள்ளியது. குழப்பத்தில் முடிந்தது கூட்டம்.

சூரத் காங்கிஸ் மாநாட்டு மேடையிலே கலவரங்களும்,

குழப்பங்களும் நீடித்தன. அரவிந்தர் அமைதியாக அமர்ந்த இடத்திலேயே அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.

மாநாட்டுக்காரர்கள் அரவிந்தரை அகன்று சென்று அமருமாறு கேட்டுக்கொண்டும், அவர் அசையாமலேயே அமர்ந்திருந்தார். பின்பு, மாநாடு கலையும்போதே அவர் தனது நண்பர்களுடன் வெளியே வந்தார்.

சூரத் மாநாட்டிலே இருந்து திரும்பிய அரவிந்தர், மும்பை, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலே சுற்றுப் பயணம் செய்து, நாட்டின் முழு சுயராஜ்யத் தேவையை விளக்கினார். ஆயிரக் கணக்கான மக்கள் அரவிந்தர் சொற்பொழிவுகளைக் கேட்டு சுதந்திரத் தீவிரவாதிகளானார்கள்.