பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

படுத்தப்பட்ட தேயிலைத் துளைக் கூட தோட்டத்திற்கு எருவாக்கிக் கொள்கிறார்கள்.

நூல் நூற்புத் துறையில் பெண் சாதகர்கள்தான்் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். கைத்தொழில் பிரிவினர் பலவகைப் பொருள்களைத் தயாரிக்கிறார்கள். ஆசிரம ஊதுவத்திகள் புகழ் பெற்றவை ஆகும்.

சொந்த அச்சகம் ஆசிரமத்துக்காக உள்ளது. பல பெரிய நவீன அச்சு இயந்திரங்கள் அங்கே இருக்கின்றன.

ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், தமிழ், இந்தி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அச்சிடும் வசதிகள் அங்கே இருக்கின்றன. சீன மொழியில்கூட அச்சிட இங்கே வசதியிருக்கின்றது.

வர்ண பிளாக்குகளும், சாதாரணமான பிளாக்குகளும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. மேற்கண்ட இந்த அச்சகத்து எல்லா வேலைகளையும் சாதகர்களே செய்கிறார்கள்.

ஆசிரமத்தில் இருக்கும் சாதகர்கள், தங்களுக்கு என்ன பொருள்கள் தேவையோ, அவற்றை அன்னைக்கு எழுதி அனுப்புவார்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று; அந்தப் பொருள்கள் அன்னையின் வாழ்த்துதலோடு சாதகர்களுக்கு வந்து சேரும்.

தனியான, பெரிய நூலகம் ஆசிரமத்தில் இருக்கின்றது. ஏறக்குறைய இருபதாயிரம் நூல்கள் அந்த நூலகத்தில் உள்ளன.

பலமொழிப் பத்திரிக்கைகளும் ஆசிரமத்துக்கு வருகின்றன. பல சாதகர்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக உள்ளார்கள்.