கட்டுரைக் கலை 15?
மலை உச்சி மேல் விளங்கின செஞ்சுடரொப்ப நிற்க. நாம் அவர்களிடத்தில் ஒரு கதிர் இரந்து சிறு மீளுக நின்ருே மாகிற் பாக்கியந்தானே. அவர்கள் வழுவாதொழுகும் உத்தம முறையைக் கண்டு நாமுந் தூரமாயினும் பின் சென்று ஒழுக வருந்துவோமொழிய, அவர்கள் பிடிக்கவேண்டிய ஒழுக்கத்தைக் காட்ட நினைப்போமோ? ஆகையால், இதிலே வேதியர் என்னும்போது விசேஷ மாய் உபதேசிகளைக் குறித்தோம் என்று அறியக்கடவீர் கள். விசேஷமாய் என்ருேம், அதேதென்னில், மனிதர் கரையேற விலக்கவேண்டிய தீவினை, செய்யவேண்டிய நல்வினை, அறியவேண்டிய சத்தியங்கள் இவையெல்லாம் பிறர்க்கு உணர்த்துவது உபதேசிகளுக்கு மாத்திரந் தொழிலாமென்று நினைக்கத் தேவையில்லை. இந்தத் தொழிலைச் செய்வது உபதேசிகளுக்கல்லாதே சில பெயர் களுக்குங் கடளுகி, எவர்க்கும் பெரும் பலளுமே. தாய் தகப்பன் தம் மக்களுக்கும், ஆண்டவர்கள் தங்கள் அடிமைகளுக்கும், மூப்பர் தம்மைச் சேர்ந்த இளையோருக் குந் தீவினை விலக்கி நன்னெறி காட்டி அவர்களே மேற்கதி யிற் கரையேற்ற வருந்துவது கடன்ருனே. இக்கடனில் லாதவர்கள் முதலாய்ப் பிறர் ஆத்துமங்கெடுவதைக்கண்டு இரங்கிப் பிறரையுங் கதியிற் சேர்க்கப் பிரயாசைப்பட் டால் இந்த அரிய தயையால் தங்களுக்கு உத்தம பலனைப் பெறுவதுமன்றி. விளைந்த பலனை ஒரு நாளும் போக்க முடியாமல் வர்த்திப்பிக்கலாம் என்பதுஞ் சந்தேகமற்ற நிச்சயந்தானே. ஆதலால் இதிலே உபதேசிகளை விசேஷ மாய்க் குறித்து இப்புத்தகத்தை எழுதினுலும், பொதுப் பட யாவர்க்கும் தன்மையாக முடிக்கப் பிரயாசப்படு வோம். இதல்ை இத்தொழில் இயல்பும் மாட்சியும் இன்னதென்று சொன்ன பின்னர் இத்தொழில் எவர்க்கும் பொதுத்தொழில் என்று காட்டுவோம்.