பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிக் அவாகியன் 87 அவன் தனது துப்பாக்கியை நன்ருகப் பரிசோதித்தான். அதை முத்தமிட்டான். நாங்கள் புறப்பட்டோம். சோனி ரகசியக் குரலில் என்னைக் கெஞ்சிள்ை: 'ஐயா, அவரை அங்கேயே விட்டுவிடுங்கள்!’’ அந்த நேரத்தில் அவளுடைய கண்கள், கிழப் புலியின் கண் களைப்போல் மட்டுமன்றி, வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா!' என்று கெஞ்சிக் கேட்ட எல்லாப் புலிகளின் கண்களைப் போலவும் தோன்றின. 宰 皋 家 நடந்து தள்ளாடி நாங்கள் மிகுந்த களைப்புடன் அந்த இடத்தை அடைந்தோம். நாணல்களையும் தன் துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தபடி, "நான் இவைகளைச் சுட்டுப் பரத்திவிடுவேன்’ என்று வாலி அர்த்தமில்லாமல் கத்தினன். நாங்கள் நீல நீரூற்றருகில், நாணல்கள் சலசலக்கும் வரை அமர்ந்திருந்தோம். மண்வாசனை என்ன அணுகியது. புலிகள் சந்தோஷத்தால் மண்ணைப் பிருண்டுகின்றன என நான் புரிந்துகொண்டேன். "ஆயிரம் நல்வரவு, வாலி சாய்ஃபி, உனக்காக நாங்கள் நீண்ட நெடுங்காலமாய்க் காத்திருக்கிருேம்.’’ சாய்ஃபி, உலர்ந்த புல் மீது கிடந்த துப்பாக்கியை எடுக்கக் கை நீட்டினன். அதே நேரத்தில் கிழட்டுப் புலி, துப்பாக்கியி லிருந்து தன் பாதத்தை உயர்த்தி, அவனே நேராக நோக்கி நின்றது. 'சுடு, வாலி சாய்ஃபி, லோரஸ்தான் ராஜாவே!’ இதர புலிகள் நாணல் புதர்களினூடாக முன்னே வந்தன. அவை தங்கள் கண்களால் என்னிடம் பேசின. 'இவனை இட்டு வந்ததற்காக நன்றி. இப்போது வீட்டுக்குப் போ. யாராவது உன்னை எல்லைவரை கொண்டுவிடுவர். யார் போவது?’’ 'நான்’ என்று அவை அனைத்தும் கத்தின. ஒரு புலி என்ைேடு வந்தது. பாறைகளுக்குப் பின்புறமிருந்து அது சுடப்பட்டிருந்தது. அப்படி அடிபட்டதில் அதன் பின்பக்க இடதுகால் நொண்டியாகிவிட்டது. அது நாணல் புதர்களே விலக்கியவாறு முன்னே சென்றது. முணுமுணுத்தது.