பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் 譚 盤5 இருந்ததோ? மிஸ் மேரி இப்போது அவனைப் பார்த்தால்: ஒரு குலைப் பழங்களையும் அவன் தின்றுவிட்டான என்ன? இன்னும் சிலவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? அவன் தரையில் படுத்துக் கண்களை மூடினன். முந்திய தினம், ஒரு கிழவிக்கு அவன் ரணசிகிச்சை செய்தான். அவளது பித்தப் பையை நீக்கினன். கிழவியை அவர்கள் வெள்ளைத் துணிகளால் போர்த்து, முகத்தை மட்டும் மூடாமல் விட்டிருந்தபோது, அவன் சட்டெனக் கவனித்தான். அவனுடைய அம்மாவின் உருவம். அபத்தம். அவளோ, சுருக்கங்களும் நரை முடியும் கொண்ட கிழவி. அவள் கண்கள் உடனே மூடிக்கொண்டன. அவன் பயந்துவிட்டான். அவள் நாடித் துடிப்பைப் பரிசோதித்தான். அவளுடைய இதயம் அமைதியாகவும் சீராகவும் துடித்தது. எவ்வளவுக்கு அவன் அந்த மாதின் வாழ்க்கையை நீட்டுவித்தான்? ஒருவேளே அதைக் குறைத்துவிட்டானே?. அவள் பித்தப்பையில் பெரிய பெரிய கற்கள் இருந்தன. துரத்தில் ஒரு குரல் 'அர்த்த வாஸ்த், அர்த்தவாஸ்த்’’ என்று அழைப்பதை அவன் கேட்டான். பிறகு ஒரு விமானம் ஆகாயத்தில் மிகவும் தணிவாகப் பறந்து சென்றது. அவன் தன் கண்களைத் திறக்கவில்லை. மிஸ் மேரி ஒரு ரண வைத்தியர். பாரிஸ் நகரின் வெளிப்புறத்தில் அவளுக்கு ஒரு கிளினிக் இருக்கிறது. அவள் மணம் செய்துகொள்ளவில்லை; தன்னந்தனியாக வசிக்கிருள். "ஒரு ரணசிகிச்சையின்போது நான் செத்துப்போக விரும்பு கிறேன்' என்று அவள் அன்று, இத்தாலிய உணவு விடுதியில், சொன்னாள். அது ஒயின் செய்த வேலையா? இல்லை, அவளே திடீரென்று சோகம் அடைந்தாளா? மனிதன், இலையுதிர் காலத்தின் கடைசி திராட்சைகளைப்போல், இலைகளுக்கிடையே மறைந்து, சூரிய கிரணங்களால் மெதுவாகக் காய்ந்து உலர்ந்து, மடிந்துபோக வேண்டும். அவன் கண்களைத் திறந்தான். வானத்தைப் பார்த்தான். நீலப் பாலைவனமாகத் தோன்றியது அது . என்ன, வாகன்?’’ ஒரு ஆள், நாற்பது - நாற்பத்தைந்து வயதானவன், அவன் தலைக்கு மேலாக நின்ருன். அது யாராக இருக்கும் என்று அவன் யூகிக்க முயன்ருன்... "இந்த வருஷமும் எங்கள் மார்க்கோவை விட்டு விட்டார்கள். நீ வந்தது நல்லதாயிற்று. என்ன செய்வது, யாருடன் பேசுவது என்று தெரியாமல் நான் தவித்தேன்...'