பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் 置荡? ஸ்ட்ராபெரிப் புல்வெளியில் அவன் இருந்த இடத்துக்கு ஆஷ்கென் வந்தாள். அங்கே அவன் புல் அறுத்து உலரப் போட்டிருந்தான். அதைப் போராக அடையவேண்டும். அவள் முதலில் அங்கே போய்ச் சேர்ந்திருந்தாள். அவள் விடிகாலையி லேயே பசுக்களைப் பால் கறந்துவிட்டாள். பாலை உறை குத்திவிட்டு அங்கே வந்தாள். அவன் அங்குப் போனபோது, வைக்கோல் சேகரம் செய்யப்பட்டிருந்தது. ஒரு பெண் மரத்தடியில் படுத்துக் கிடந்தாள். அவள் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். தூரத்தி விருந்து பார்க்கையில், அவள் இறந்துபோன அமோவின் மனைவி என்று அவன் எண்ணிஞன். அவன் ஆத்மா சாந்தி அடைக இறந்த அமோவின் மனைவி விருஷ்போல் இருந்தாள் அவள். ஆளுல் அவன் தன்னைப் பார்த்தே சிரிக்கவேண்டி யிருந்தது. அவள் இங்கே என்ன செய்யப்போகிருள்? ஆளுலும் அது நிஜமாகவே விரூஷ் ஆக இருந்தால், அவன் கவலைப்பட மாட்டான். ஆயினும், அது ஆஷ்கென். அவள் உதயத்திலேயே பசுக்களைப் பால் கறந்து, பாலை உறை குத்தி விட்டு, இங்கே வந்திருக்கிருள். புல்வெளி வெப்பமாக இருந்தது. ஆஷ்கெனின் உடல் நனைத்திருந்தது. அவன் களை பொருந்திய அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு கண்களைப் பார்த்தான். ஆஷ்கென் துரங்கிக்கொண்டிருந்தாள். உண்மையில், அவள் உறங்கும்போது அவளது வழக்கமான நிலையில் இருப்பதில்லை. அவன் ஆஷ்கெனின் கழுத்தில் ஒரு புல்லினல் கீச்சம் காட்டிவிட்டுச் சிரித்தான். ஆனல், அவள் விழித்தெழவில்லை. என்ருலும், அவளது இமைகள் துடித்தன. ஒன்றுக்கும் உதவாத மாடன்” என்று அவள் சொன்னாள். எனினும் அவள் விழித்து எழவில்லை. து.ாக்கத்திலேயே அவள் அவன் கழுத்தைச் சுற்றித் தன் கைகளை வளைத்தாள். அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்ததாகவே தோன்றியது. அவள் சிரித்தாள். அது முடிகிறவரை அவள் உண்மையில் விழிப்படையவில்லை. அப்புறம் அவள் கண்களைத் திறந்து, வானத்தைப் பார்த்தபடி அங்கேயே படுத்திருந்தாள். அவள் முடிவில் எழுந்தபோது, அது மீண்டும் அவனுடைய ஒட்டி உலர்ந்த ஆஷ்கென்தான், வயதாகிவிட்ட, அதிகம் பேசும் குண முடைய அதே கிழவிதான். 'ஒவ்வொருவரும் இதற்குள் அவரவர் வைக்கோலைச் சேர்த்து அடைத்துவிட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் திருடுவதில் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிருர்கள். ஆனால், இங்கோ நாள் முழுவதையும் குறட்டைவிட்டுக் கழித்தாகிறது. தான் இங்கே வேலை செய்ய வந்ததாக அவன் சொல்லுவான். ஆளுல், மழை பெய்தாலும் வெயில் காய்ந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை.