பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 & ஆகஸ்ட் அவனைப் பொறுத்தவரை மாரிக்காலம் என்று எதுவும் இல்லை. அதல்ைதான் அவன் உல்லாசமாய்த் திரிகிருன். அதனுல்தான் அவன் வெல்லப்பாகு மாதிரி மெதுவாக ஊர் கிருன். அவனுக்கு வேண்டியதெல்லாம் நேர்த்தியான, உருண்டையான, பள்ளம் படிந்த ஒரு கல்தான். அதன் அடியில் ஊர்ந்துபோய் சுகமாக இருக்கலாமே." அவன் தன் கையிலிருந்த கருவியால் அவளைத் தாக்க விரும்பினன். ஆனால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தின்ை. ஏனெனில், அவளுக்காக அவன் வருத்தப்பட்டான். அந்த அப்பாவி சளசளக்கிறபோது நிறுத்துவதே கிடையாது. அவள் உண்மையில் அற்பமானவள் இல்லை. பழக்கதோஷத்தினுல்தான் சும்மா ஏசிள்ை. அவள் அற்பமாக இருந்தால் அதுகூடப் புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஏனென்ருல், இது சி ர ம மான வாழ்க்கையே. அவன் நிஜமாகவே ஒவ்வொன்றிலும் மெத்தன மாகத்தான் இருந்தான். உதாரணத்துக்கு ஜிக்கோரை எடுத்துக் கொள்வோம். அவன் சிறிது காலம் கூட்டுப் பண்ணையின் தலைவராக இருந் தான். பிறகு, குழுத் தலைவன் ஆன்ை. அப்புறம் ஒரு ஸ்டோர்கீப்பரானன்; விற்பனையாளன் ஆனன். பிறகு, பால் பண்ணையின் நிர்வாகி ஆகிவிட்டான். அவனை ஒரு வேலையி லிருந்து வெளியே துரத்த வேண்டியதுதான்; உடனேயே இன்னொரு வேலை தேடிக்கொள்வான். அதெல்லாமே பெரிய தப்பு, எது என்ன என்று அவர்கள் கண்டுகொண்ட உடனேயே அவனை விரட்டி விடுவார்கள்; எல்லாம் மாறிப்போகும் என்று நமக்கு நாமே சொல் விக் கொள்ள லாம். உண்மையில், நாளடைவில் அவன் விலக்கப்படுவான். ஆனால், விரைவிலேயே வேருெரு அலுவல் மேஜையின் பின்னே அவன் நின்று கொண்டிருப்பான். உடனே, அங்கும் அவன் நீண்ட காலம் நிலைத்திருக்கமாட்டான் என்று நமக்கு நாமே சொல்வோம். நிலைத்திருக்கமாட்டான்தான். ஆளுல் அவை அனைத்தின் முடிவான விளைவு என்ன? இதோ ஜிக்கோர், அறுபது வயதாகி, பென்ஷன் வாங்கிக்கொண்டு இருந்தான். தனக்குப் பின்னல் நல்ல பகட்டுடன் காணப்பட்டான். எப்போதும் மிகப் பெரிய, சாறு நிறைந்த துண்டுகளாகப் பார்த்துப் பிடுங்கிக்கொள்ளத் தயாராகவும் இருந்தான். இதோ நானும் இருக்கிறேன், பைன் மரப் பலகைகளைத் திட்டம் பண்ணிக்கொண்டும், இது தற்காலிகமானதுதான் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டும். - அவனுக்கும் ஆஷ்கெனுக்கும் கல்யாணம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தபோது, அவர்கள் கடுமையாகச் சண்டை