பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. செய்துன்சியன் 19 # ஒருவரும் பயப்படவில்லை. ஒவ்வொரு பத்திலும் தான் ஒருவகை இருப்பான் என்று எவரும் எண்ணவில்லை. திடீரென்று நரம்புத் தளர்ச்சி உற்ற ஒருவனின் குரல் அமைதியைக் கிழித்து எழுந்தது. நான் சாக விரும்பவில்லை. அவர்கள் என்னைக் கட்டாயப் படுத்தி...' இப்போதுதான் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர். ஒவ்வொரு பத்துப்பேரிலும் ஒருவன் சாவதற்கு இருந்தான். பத்தாவது, இருபதாவது, முப்பதாவது. மொத்தத்தில் அவர்கள் எழுபதுபேர். ஆகவே ஏழுபேர் சாகவேண்டும். வரிசையின் முதலாவது வீரன் தன்னிச்சையாகச் சிரித்தான். அவன் திருப்தியுடன் அதிகாரிகளை நோக்கினன். ஏனெனில், அவன்தான் முதல் நபர்; அதனுல் அவர்களுக்கு நன்றி உடைய வகைத் தோன்றினன். அதிகாரிகளில் ஒருவர் ஒரு சினிமா நடிகர்போல் காணப்பட்டார். எனவே, அவன் தன் கைகளைப் பைகளுக்குள் நுழைத்துக்கொண்டு சந்தோஷமாக நிமிர்ந்து இராணுவக் கட்டளையைச் செயல்படுத்தமாட்டோம் எனத் துணிவதற்கு அவர்கள் யார்? அவர்கள் ஒன்றுமற்றவர்கள், சாதாரணப் போர்வீரர்கள். அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். ஆனால், அந்தச் செயலுக்குத் திட்டமிட்டவர்களில் தானும் ஒருவன் என்பதை அவன் நினைத்துக்கொண்டான். கலக்கமுற்று அவன் வெட்கத்துடன் தன் கைகளைப் பைகளிலிருந்து வெளியே இழுத்தான். தரையையே பார்க்கலாஞன். அந்த அதிகாரி உண்மையாகவே ஒரு சினிமா நடிகர்போல் தோன்றி ஞரா என்று சிந்தித்தான். இரண்டாவது, மூன்ருவது வீரர்களால் தாங்கள் சாக வேண்டாம் என்று நம்ப முடியவில்லை. நிறுத்தாமல் அவர்கள் எண்ணிஞர்கள். ஒன்று, இரண்டு. அவன் இரண்டாவது நபர். ஒன்று. இரண்டு. மூன்று. அவன் மூன்ருவது ஆள். இருந்த போதிலும், அவர்கள் காரணம் இல்லாமலே முதலாவது நபர் மீது பொருமை கொண்டார்கள். அதே நிலைமைதான் என்ருலும் கூட, முதலாவது-இரண்டாவது-மூன்ருவது நபர்கள் சுடப்படமாட்டார்கள் என்ருலும், அவர்கள் அவனைப் பார்த்துப் பொருமைப்பட்டார்கள். அவன் முதலாவதாக, அவர்கள் அனைவரிலும் முதலாவதாக இருந்த காரணத்துக்காகவே வெறுமனே பொருமைப்பட்டார்கள்.