பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 துரோகி என்னதான் கடுமையாக முயன்ருலும், நான் வெளியேற இயலவில்லை. குழியின் சுவர்கள் மிருதுவான வழுக்குப்பாறையால் அமைந்திருந்தன. கையால் பற்றிக்கொள்ளவோ, காலுக்குத் தாங்கலாக அமையவோ அங்கே எதுவும் இருக்கவில்லை. அடியோடு நம்பிக்கை இழந்து நான் ஒரு கல் மீது உட்கார்ந்தேன். அதுமாதிரிச் சாவது எவ்வளவு மடத்தனமானது என்று எண்ணினேன். திடீரென்று ஒரு மூலையில் இரண்டு கண்கள் மினுமினுப்பதை நான் கண்டேன். நெருக்கமாகப் பார்த்தேன். என் தேகம் விறைத்தது. ஒரு பெரிய பாம்பு அங்கே சுருண்டு கிடந்தது. அது என்னையே நிலையாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆகவே, நான் பயத்தால் செயலிழந்து, ஒரு பாம்புக்கு நேர் எதிராக உட்கார்ந்திருந்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தோம். எங்களில் யாரும் அசையத் துணிய வில்லை. அதைச் சுடுவதற்கு முயலலாமா என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. ஆனால், நான் அதை ஒரேயடியாகக் கொல்லாமல், வெறுமனே காயப்படுத்தினுல் என்ன நேரும்? அப்புறம் என் கதி என்ன ஆகும்? முதலில் பகைமை உணர்வால் பளபளத்த பாம்பின் கண்கள், மெதுமெதுவாக அமைதியுற்றது. அது தனது தட்டையான பெரிய தலையை வெளியே நீட்டி, முன்னே நகர்ந்தது. என் மீதிருந்த பார்வையை அது அகற்றவேயில்லை. 'இப்போது அது என்னை உணவாக விழுங்கப்போகிறது’ என்று நான் நினைத்தேன். பயம் என் இதயத்தைக் கவ்வியது. நான் என் துப்பாக்கியை எடுக்க விரும்பினேன். ஆனல் என் கை கீழ்ப்படிய மறுத்தது. இதற்குள் பாம்பு மெதுவாக என் அருகில் வந்து, சுருண்டு, என் கண்களுக்குள் நேரே உற்றுப் பார்த்தபடி தலையை உயர்த்தியது. நான் ஒரே அடியாக நடுங்கிக்கொண்டிருந்தேன். உண்மை தான். அது பகை உணர்வு எதுவும் கொண்டிருந்ததாகத் தோன்றவில்லை. ஆனலும் பாம்பு என்ன செய்யும் என்று யாருக்குத் தெரியும்? அலட்சியப்படுத்துவதற்குரிய ஜந்து இல்லையே அது ஒரு பாம்பின் பார்வையை எதிர்த்து நோக்கு வதற்கு ஒருவன் வைரநெஞ்சு பெற்றிருக்கவேண்டும். நான் ஆடாது அசையாது இருந்தேன். பாம்பும் அசைய வில்லை. அது ஒரு கல்பகாலம் நீடித்ததாகத் தோன்றியது.