பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறும் ஊரும் 10.

“ காவிரித் திருநதியிலே, ஒரு -

கருணைமா முகில் துயிலுமே “

என்று அக்காட்சியை அழகுறப் பாடினார் ஒரு கவிஞர்.

காவிரியின் இருமருங்கும் செழுஞ் சோலைகள். அச்சோலைகளிலே மயில் தோகையை விரித்து ஆடும்; குயில் மறைந்து நின்று கூவும். ஆற்றில் அன்பர் இட்ட மலரும் மாலையும் அலைகளிலே அமைந்து ஒடும்.

“பூவார் சோலை மயில்ஆல,

புரிந்து குயில்கள் இசைபாட, காமர் மாலை அருகசைய

நடந்தாய். வாழி காவேரி என்று கடலை நோக்கி நடக்கும் காவிரி யாற்றின் அழகினைப் பாடுகின்றார் கவிஞர்; ‘ இன்று போலவே என்றும் வாழ்க’ என்று வாழ்த்துகின்றார்.

காவிரிக் கரையில் மயில் ஆடும் அழகினைக் கண்ட பழந்தமிழ் மக்கள் அவ் ஆற்றங்கரையில் அமைந்த ஒர் ஊருக்கு மயிலாடுதுறை என்றே பெயர் இட்டனர். காவிரியாற்றின் துறையில் தோகையை விரித்து ஆடும் மயிலின் கோலம் அப்பெயரிலே குறிக்கப்படுகின்றது. தேவாரம் எழுந்த காலத்தில் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றிருந்த ஊர், பிற்காலத்தில் மாயூரபுரம் ஆயிற்று: அப்பெயர் மாயூரவரம் என மருவிற்று; அதுவே பின்னர் மாயவரம் ஆயிற்று. .

பெற்ற பிள்ளையைப் பாலூட்டி வளர்க்கும் தாய் போல் நிலத்தில் வளரும் பயிர்களை நீருட்டி வளர்ப்பது நதியாகும். வருபுனல் என்று வள்ளுவர் குறித்த நதிகளை அருமையாகப் போற்றினர் தமிழ் மக்கள், சிறிய நதிகளுக்கும் சிறந்த பெயர் இட்டனர். தொண்டை நாட்டில் உள்ளது பாலாறு பாண்டி நாட்டில் உள்ளது