பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கயத்தாறு

இசை பாடும் புலவர் மலிந்த தமிழ் நாட்டில் வசை பாடும் கவிஞரும் சிலர் வாழ்ந்தனர். அவர்களில் தலைமை சான்றவர் காளமேகம் அம்மேகம் தமிழகத்தில் வளமாக வசைமாரி பொழிந்தது. வசை பாடக் காளமேகம்’ என்ற புகழுரையும் பெற்றது.

ஒருகால் சோழ நாட்டிலிருந்து பாண்டி நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் காளமேகம். ஆலஞ்சோலை சூழ்ந்த ஒர் அழகிய சிற்றுனர் அவர் கண்களைக் கவர்ந்தது. அவ்வூரின் நடுவே நின்ற திருக்கோயில் அவர் உள்ளத்தை ஈர்த்தது. மாலைப் பொழுதில் ஆலய வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது’ என்றெண்ணி ஊரின் உள்ளே சென்றார். கண்ணுக்கினிய சோலையிலே கோயில் கொண்டிருந்த ஈசனைப் பண்ணார்ந்த பாட்டிசைத்துப் போற்ற விரும்பினார். ஒரு நாமம், ஒர் உருவம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி வணங்குதல் வழக்கமாதலின் அங்குள்ள ஈசன் பெயர் யாதோ என்று அறிய ஆசைப்

{...}l-l...so IT.

அந் நிலையில் அவ்வாலயத்தில் வழிபாட்டிற்காகக் குழுமியிருந்த அடியார்கள் இவர் ஊருக்குப் புதியவர் என்று தெரிந்து கொண்டு, ‘ஐயா ! இவ்வூர் ஆலங்குடி: இங்குள்ள ஈசனுக்கு ஆலங்குடியான் என்பது பெயர் என்று அறிவித்தார்கள். அப்போது காளமேகம் அவர்களை