மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 麗龜變 சந்தர்ப்பத்தில் வியாக்கியான மிடுகின்றார். இந்த வியாக்கி யான சக்கரவர்த்தி. அனாதிகாலம் நம்மைப் பெறுகைக்கு அவன் படுகின்ற பாட்டையும் நினைவூட்டுகின்றன. இத் திருக் கண்கள்: அழகையும் வென்றுவிடுகின்றது அருள் என்பது குறிப்பு. ஆச்ரிதரை (அடியரை)த் தன்னை அழிய மாறியும் நோக்கும்’ என்று கூறப்பெறும் இறைவன், தன்னுடைய அழகையும் அருளையும் தானே காட்டு கின்றானாம். அவன் காட்டக் கண்டு அடியார் அடிதொழுததும், அந்த வடிவம் பிரஜை (குழந்தை) பால் குடித்தால் தாயுடம்பு நிறம் பெறுமாப்போலப் புதிய அழகு பெறுகின்றதாம், இத்தகைய அழகனை என்னுடைய மனம் ஆசைப்பட்டுக் கண்டு கொண்டது அமிர்தம் கடைந்த காலத்தில் பெரிய பிராட்டியார் அவனை நாடிக் கண்டு கொண்டது போல’ என்கின்றார் ஆழ்வார். இந்தத் திருமேனியை மனங்குளிர தியானித்து அருளுக்கும் அழகுக்கும் வாசகமான திருநாமத்தையும் வாய்குளிரச் சொல்லிக் கொண்டிருந்தால், தேசும் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிபிறப்பும் மற்றவையும்' தேசு தேஜஸ்; திறல் . திறமை; திரு . ஐசுவரியம்; தாமே தேடிவந்து நம்மை அடையும் என்கின்றார். அன்பர்களே, இங்ங்ணம் ஞானபக்தி வைராக்கியங்களின் வடிவமான பேயாழ்வாரை, மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மாமரைாள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்.' என்று திருவரங்கத்தமுதனார் சிறப்பித்துப் போற்றுவர். 100. மூன். திருவந். - 10 101. இராமாதுச் . நூற். 10
பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/192
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை