பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமான் 273, வருகின்ற செல்வர் யாராவது இதனை விரும்பிப் பெயர்த்துக் கொண்டு போகக் கூடும்; அப்படி ஏதாவது உண்டெனில், கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள் உய்த்தவன் 7 என்பதனால் சத்தியபாமைப் பிராட்டியின் விருப்பத்திற் கிணங்கிய கண்ணபிரான் இந்திரனது நந்தவனத்திவிருந்த கற்பகத் தருவை சத்தியபாமையின் மாளிகைத் திரு முற்றத் தில் கொணர்ந்து நட்டான் அன்றோ? அவ்வாறு யாரேனும் ஒருவர் சண்பக மரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையின் வாழ்க்கைக்குக் குந்தகம் விளையக் கூடுமே என்று கருதி, தம்பகமாய் நிற்க விரும்புகின்றார். தம்பகம்-புதர். (5) தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே. (5): என்று விரும்பிய ஆழ்வார் சிறிதளவு சிந்தித்த அளவில் வேறோர் உண்மை அவரது மனத்திற்குத் தட்டுப்படு கின்றது. அரசு வனத்துறை அலுவலர் மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி சோதிப்பவராதலால், அவர்கள் தம்பகத்தைக் களைந்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் திர்ந்தொழியக் கூடும் எனவும் தினைத்த ஆழ்வார். அவ்வாறு ஆகாமல் என்றும் ஒரு படி யாயிருக்கும் படி அத்திருமலையில் ஒரு பாகமாகக் கடவேன்' என்று. விரும்புகின்றார். அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே (6) என்பது அவர்தம் திருவாக்கு, பொற்குவடாம்படிப் பாரித்த ஆழ்வார் சிறிது யோசித் தார். இதில் ஓர் இடையூறு இருக்கும் என்று அவர் மன்த் 27. பெரியாழ். திரு.1.9:9 18