பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை இரண்டாவது--மாறவர்மனான இந்நெடுமாறன் கங்கராசனுடைய மகளான பூசுந்தரியை மணம் புரிய விரும்பி அவளைப் பெற முயன்றபோது வடவரசர் பலர் திரண்டெதிர்த்தனர் என்றும், அவரையெல்லாம் மாறங் காரி என்ற தன் மகாசாமந்தனைத் தலைமையாகக் கொண்ட பெருஞ்சேனையால் அப்பாண்டியன் அழித் தோடச் செய்து அக்கன்னியாரத்னத்தை அடைந்து மணந்தனனென்றும் வேள்விகுடிச் சாஸனங் கூறு கின்றது. அவ்வாறு மணம்புரிவதற்கு அநுகூலராகக் கங்கராசன் மக்கள் நெடுமாறன் சார்பாக நின்றிருத் தலும், மைத்துன முறையினரான அவர்க்கு உதவியாக வடவரசரைப் போரில் அவன் புறங்கண்டிருத்தலும் கூடியனவன்றோ ? ஆக, இவ்விருவகை நிகழ்ச்சிகளுள் ஒன்றை ஆழ்வார் பாசுரம் குறிப்பாற் புலப்படுத்துவது என்றே அதன் போக்கால் தோற்றுகின்றது. இக்கூற்றுச் சிலர்க்கு அதிவாதம் போலத் தோற்று மாயினும் ஆழ்வார் பாசுரங்களில் ஆராய்ச்சி யுடையார்க் கெல்லாம், ஸாபிப்ராய விசேஷண விசேஷ்யங்களைக்கொண்டு யான் கண்ட கருத்து ஏற்புடையதாகும் என்பது திண்ணம். இங்ஙனம் தன் அடியவனான நெடுமாறனுக்குத் திருமால் பகையழித்து அருள்புரிந்துவந்த செய்தியே “குறுகாத மன்னரைக் கூடு கலக்கிவெங் கானிடைச் சிறுகா னெறியே போக்குவிக்குஞ் செல்வன் பொன்மலை' (பெரியாழ். திருமொழி, 4, 2, 8). என்று அடுத்துவரும் பாசுரத்தும் ஆழ்வாரால் எடுத்து மொழியப் பட்டதாகும், மேற்பாடலின் தொடர்பு கொண்டு இவ்வடிகளை நோக்குமிடத்து, குறுகாத