பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் இந்த வெட்ட வெளியின் வழியாகச் சென்றோம், எனக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த போர் வீரர் அந்த பெர்ச் மரத்தைத் தொட்டார்; பின்னர் உளமார்ந்த, அன்பு களிந்த அக்கறையோடு இவ்வாறு கூறினார்: ** அன்புக்குரிய அப்பசாவி மரமே, நீ மட்டும் எப்படி தப்பிப் பிழைக்க முடிந்தது? பைன் மரங்கள் கொலையுறுகின்றன; ஒரு குண்டு அவற்றைத் தாக்கும்போது, அவை அப்படியே செத்து விழுகின்றன; அவற்றின் வெட்டுண்ட தலைப்பகுதிகள், ஊசியிலைகள் போர்த்தி மூடியுள்ள தரைமீது, பிசினை ரத்தம்போல் ஒழுக விட்டவாறே விழுந்து கிடக்கின்றன. ஆனால் ஓக் மரங்களோ அவ்வளவு எளிதில் மரணத்துக்கு இரையாவதில்லை. {பெயரில்லாத சிற்றாறு ஒன்றின் கரைமீது வளர்ந்திருந்த ஒரு *பழைய ஓக் மரத்தின் அடி மரத்தை ஒரு ஜெர்மன் குண்டு தாக்கிவிட்டது. அந்த மரத்தில் பாதி கிழிந்து , வாய்பிளந்த காயத்தினால் வாடிச் சுருங்கி இறந்து விட்டது. என்றாலும், அதன் மறுபாதி அந்தக் குண்டு வெடிப்பினால் ஆற்றின் பக்கமாகச் சாய்ந்து, வசந்த பருவத்தில் அதிசயிக்கத்தக்க விதத்தில் புத்துயிர்பெற்று, புதிய இலைகளைத் தோற்றுவித்துவிட்டது. முடமாக்கப்பட்ட அந்த மரத்தின் கீழ்க்கிளைகள் நீரில் குளித்துக் கொண்டிருக்க, அதன் மேற்கிளைகள் சூரியனின் இதமான கதகதப்பை நாடித் தமது விறைப்பான, வடிவார்ந்த இலைகளைத் திருப்பி, சூரியனை நோக்கி இன்றும் கூட மேலே உயர்ந்து கொண் டிருக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன் ... ... . ஒரு கறுப்பு நிற ராஜாளிப் பறவையின் தோள்களைப்போல் சற்றே கூனிய பரந்த தோள்களைக் கொண்ட உயரமான மனிதரான லெப்டினென்ட் கெராசிமோவ் நிலவறைக்குள் செல்லும் வாசலில் அமர்ந்திருந்தார்; அவர். அன்றைய போரைப் பற்றியும், படைப்பிரிவினால் வெற்றிகரமாக எதிர்த்தடிக்கப்பட்ட ஜெர்மன் டாங்கித் தாக்குதலைப்பற்றியும் விவரமாகக் கூறினார். அந்த லெப்டினென்டின் மெலிந்த முகம் அமைதியாகவும், ஏறத்தாழ உணர்ச்சிவசப் படாததாக வுமே இருந்தது; ரத்தம் பாய்ந்த அவரது கண்கள் களைப்பினால் சுருங்கிப் போயிருந்தன. அவர் பெரிய கணுக்களைக் கொண்ட தமது பெரிய கைவிரல்களைப் பிணைத்துத் தமது கரங்களை அடிக்கொரு தரம் பற்றிப் பிடித்த வராய், ஓர் ஆழ்ந்த, உடைபட்ட குரலில் பேசினார், மெளனமான வருத்தத்தை அல்லது ஆழமான, வேதனைமிக்க சிந்தனையை மிக

நன்றாகப் புலப்படுத்திய இந்த அபிநயம், அவரது வலிமைமிக்க

104