பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை, அதுதான் இல்லை, பற்களால் மேலாதிக்கம் செலுத்த வில்லை. நல்லவேளையாக கடவுள் அதிலிருந்து என்னைக் காப்பாற்றினார். இப்போ து அவளுக்கு வயதாகி விட்டாலும் கூட, இன்றும் வாய் நிறைய அந்தப் பற்களைக் கொண்டவளாகத் தான் அவள் இருக்கிறாள். அந்தப் பாழாய்ப்போன கிழட்டு ஜென்மம் . இன்னும் கூட்ட கடினமான . செர்ரிப் பழக் கொட்டைகளை சூரியகாந்தி விதைகளைக் கொறிப்பது போல் தனது பற்களால் உடைத்தெறிந்து விடுவாள். மாறாக, அவள் தனது சிறு கைகளால் தான் என்னைக் கட்டிப்போட்டு விட்டாள். சிறுகச் சிறுக, ஆண்டுக்காண்டு, அவள் கடிவாளங்களை மேலும் மேலும் பலமாக இறுக்கிக் கொண்டே வந்துவிட்டாள். அவற்றைத் தளர்த்தி விடுபட வேண்டும் என்று நான் கருது வதற்குள்ளாகவே காலம் கடந்து போய் விட்டது. இப்போதோ அந்தக் குதிரைக் கழுத்துப் பட்டியைத் தரித்திருப்பது எனக்கும் பழகிப்போய் விட்டது. ஒரு சொறி பிடித்த குதிரை தன் முதுகின் மீதுள்ள சேணத்தை ஏற்றுக் கொள்வதுபோல், நானும் இந்தத் துர்ப்பாக்கியத்தை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டேன். நான் குடித்திருக்கும்போது என்னைக் கையாள்வது சுலபம்; சுயபுத்தியோடு இருக்கும்போதோ என்னைக் கையாள்வது இன்னும் சுலபம். எனவே, அவள்-அந்த மாயக்காரி -என்னைத் தான் விரும்பியவாறெல்லாம் ஆட்டிப் படைக்கிறாள். சில சமயங்களில், வயதான கோ ஸாக்குகளான நாங்கள் ஒன்று கூடி ஜாலியாகப் பொழுதைப் போக்குவதுண்டு. நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு லிட்டர் குடிப்போம்; யாரார் எங்கே வேலை பார்த்தார்கள், எங்கெங்கே சண்டை போட்டார்கள் என்ற பழைய கதைகளைப் பற்றியெல்லாம் பேசுவோம்; ஒன்றிரண்டு பாட்டும் , பாடுவோம்...... ஆனால், பாருங்கள். - குதிரைக்குட்டி புல்வெளியில் எவ் வ ள வ த ான் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் தாயை நாடி வீடு தேடி ஓடிவர வேண்டிய நேரம் அதற்கு எப்போதும் வரத்தான் செய்யும். நல்லது. அது போல் நானும் மெல்ல மெல்ல ஊர்ந்து வீடு வந்து. சேர்வேன்; அங்கோ என் மனைவி , வாணலிச் சட்டியைத் துப்பாக்கியைப் போல் தயாராகக் கையில் ஏந்திக் கொண்டு, 'எனக்காக 'வாசலில் காத்துக் கொண்டு நிற்பாள் , இயல்பாகவே, அதெல்லாம் ஒரு நீண்ட கதை. அதையெல்லாம் நான் சொல்லப் போவதில்லை... ஒரு விஷயத்தை மட்டும் உங்களிடம் சொல்கிறேன் : என் முதுகைக் கொண்டு கதவைத் திறப்பது எப்படி என்பதை அவள்தான் எனக்குக் கற்றுக்

கொடுத்தாள். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான்

152