பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்காத அளவுக்கு அது அத்தனை புதிதாக இருந்தது. அதன் பின்னால் ராணுவக் கம்பளிக்கோட்டை அணிந்த ஒரு மனிதர், சில அடிகள் நடந்ததும் ஒவ்வொரு முறையும் கீழே குனிந்து, டிராக்டர் உழுதுள்ள ஆழத்தை ஒரு குச்சியினால் அளந்து பார்த்தவாறு, கெந்திக்கெந்தி நடந்து வந்தார்.

  • அதோ அவர் நமது பண்ணைத் தலைவர்தான், அவர் தான்

அப்படி காக்கை பாதிரி கொத்திக் கொத்திப் பார்க்கிறார்! என்று எங்கள் கார் டிரைவர் முகமெல்லாம் நகை தவழ, மகிழ்ச்சி யோடு அவரைச் சுட்டிக் காட்டினார்: “'கெந்தி நடக்கும் பேர்வ ழியான அவர் இங்குள்ளவர்களுக்கு ஒரு கிலி! நான் பந்தயம் கட்டுகிறேன் . தமது டிராக்டர் ஓட்டிகள் எங்காவது ஆழமாக உழத் தவறி விட்டால், அவர் அதைச் சகித்துக் கொள்ளவே மாட்டார்; அதைப்டோல் கவனக் குறைவையும் அவர் பொறுத் துக் கொள்ள மாட்டார். நாம் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, நாம் போக வேண்டிய பாதையைத் தெரிந்து கொள்வதற்காக நான் அவரிடம் சென்று அதுபற்றிக் கேட்டேன்; அப்போது குறுகுறுப்புணர்ச்சியின் காரணமாக, நான் அவரது தானியக் கிடங்குகளையும் சற்று எட்டிப் பார்த்தேன், அவற்றில் உண்மை யில் தானியம் பிதுங்கி வழியத்தான் செய்கிறது! இங்குள்ள மக்களும் இவர் விஷயத்தில் மன நிறைவோடு மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்கள். “ இந்தக் கிழவர் மிகவும் கண்டிப்பானவர் தான். என்றாலும் இவர் ஓர் அற்புதமான பண்ணைத் தலைவர். இவர் எல்லாவற்றிலும் நியாயமான முறையிலேயே செயல் படுகிறார். நாங்களும் நன்றாகவே வேலை பார்க்கிறோம். ஏனெனில் அவரும் எங்களை மதிக்கிறார்; நாங்களும் அவரை மதிக்கிறோம்' என்று அவர் கள் கூறுகின்றனர். அவரது வீட்டில் எங்களால் ஒரு நிமிஷம் கூடத் தூங்க முடியாது போய்விட்டது, இரவெல்லாம் அவர் தமது பண்ணை வேலை காரணமாக எழுந்து நடமாடிக் கொண்டேயிருந்தார் என்று நான் அவர்களிடம் கூறினேன். அங்கிருந்த கிழவர்களில் ஒருவர் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதில் சொன்னார்: * எங்கள் தலைவர் இருக்கிறாரே, அவருக்கு ஓய்வு” என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது! ஆயினும் பாடுபடாமல் பலன் கிடையாது என்பதல்லவா பழமொழி. நாங்கள் குறைவாகப் பாடுபட்டிருந்தால், இரண்டே வருட காலத்தில், நாங்கள் மீண்டும் எங்கள் பண்ணையை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்க முடியுமா, என்ன? மாரிக்கால வயல்வெளி - பரந்த, பசிய அலைவீச்சோடு தூர தொலைக்குள் உருண்டோடி அலை பரப்பியது; அதன் எழில் எங்கள்

டிரைவரை. வியப்பினால் வாய் பிளந்து நோக்கச் செய்தது.

178