பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியத்தை, கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுதிப்பாட்டினால் ஒன்று {ட்ட மக்கள் சாதித்து முடித்துள்ளனர். - ' ர ஷ்யர்களின் பன்னூற்றாண்டுக் காலக் கனவு, அகல் சோ லியத் மக்களின் கனவாகவும் மாறிவிட்ட அக்கனவு, போல்ஷிவிக் கட்சியினால் நனவாக்கப்பட்டு விட்டது; மேலும், மாபெரும் தேசபக்தப் போரின் போது முன்னணியில் நின்றதைப் போலவே, இந்த நிர்மாணப் பணியின் ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக் கணக்கான கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர், இயற்கைச் சக்திகளை வசக்கி வழிக்குக் கொண்டுவந்து, இந்த மாபெரும் திட்டத்தைச் சாதித்து முடிப்பதில் அவர்களே மக்களை முன்னடத்திச் சென்றனர், தோழர் ஸ்டாலினின் இந்த வாசகத்தை நாம் நினைவு கூர்கிறோம்: ஒரு மாபெரும் நோக்கத்திலிருந்தே மாபெரும் ஆற்றல் பிறக்கிறது." கம்யூனிச நிர்மாணத்தின் மாபெரும் நோக்கங்களுக்குப் பணியாற்றும் மக்கள் மாபெரும் ஆற்றலையும் புலப்படுத்தினர். - திசம் லியான்ஸ்கி நீர்மின் நிலையத் திட்டத்தின் நாலாவது பகுதியின் தலைவரான இஞ்சினீயர் ரெஜ்சிகோவ், கார்க்கி நகரிலிருந்து வந்தவர்; அவரது முகச் சாடைகள் அல்லது ஒரு வேளை அவரது உழைப்பாளிக்குரிய உடற்கட்டு, அந்த நகரம் யாருடைய பெயரைத் தாங்கி நிற்கிறதோ, அந்த மாபெரும் சகப் பிரஜையின். ஜாடைகளை ஓரளவுக்கு ஒத்ததாக உள்ளன. அல்யாகினைத் தலைவராகக் கொண்ட ஒரு கோஷ்டி என் வசம் இருந்தது; அந்தக் கோஷ்டியில் சுமார் இருபது பேர் இருந்தனர் என்று ஓரளவு உள்ளப் படபடப்பு உணர்வோடும் புன்னகையோடும் என்னிடம் கூறத் தொடங்கினார் ரெஜ்சிகோவ்: "'அல்யாகினே மோல் தாவியாவிலிருந்து வந்தவர்தான்; அந்தக் கோஷ்டியில் பலரும் அவ்வாறு வந்தவர்களே. அவர்கள் மிகமிக நல்ல உழைப்பாளிகளாக இருந்தனர்; ஆனால் அது மட்டும் அல்ல: சென்ற வசந்த பருவத்தில் உடைந்து வரும் பனிக்கட்டிப் பாறை தாற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த ரயில் பாலத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திய போது, அந்தப் பாலத்தைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் நகர்ந்து வந்து கொண்டிருந்த அந்தப் பனிக்கட்டிப் பாறைகள் மீதே குதித்து, அதனைக் கோடரிகளால் வெட்டித் துண்டு துண்டாக்கினர்; போர் முனையில் ஸாப்பர்கள் உழைப்பது போல்.

அவர்கள் உழைத்தனர்.

186