பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று கட்சி பற்றும் அதன் மத்தியக் கமிட்டியின் சிந்தனை கள் செயல்கள் யாவும், நாட்டின் பொருளாதார மற்றும் தற்காப்பு ஆற்றல் வளத்தை மேலும் வலுப்படுத்தும், உலகில் சமா தானத்தைப் பாதுகாக்கும், வலுப்படுத்தும்) , உழைக்கும் 14க்களின் வாழ்க்கைத் தரத்தை இடையறாது உயர்த்திவரும் நோக்கத்தையே கொண்டுள்ளன. நாட்டின் உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் மூலமும், மிகப் பெருமளவில் மிகவும் புதிதான எந்திர சாதனங்களைப் புகுத்துவதன் மூலம் தொழிலாளரது செய்முறைகளது தொழில் நுட்பத் திறனை அதிகரிப்பதன் மூலமும், கட்சியானது எப்போதுமே விசாலமாகவும் வலுவாகவும் இருந்து வந்துள்ள தோள்களின்மீது அண்மைக்காலம் வரையிலும் ஒரு கனமான சுமையைச் சுமத்தி வந்த உடல் உழைப்பிலிருந்து மக்களை விடுவிக்க விரும்புகிறது. ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமது ஜீவாதார நலன்களைப் போற்றியும் பாது காத்தும் வந்துள்ளதும், ஆபத்துக்கு எதிராகத் தம்மை எச்சரித்து வருவதும், தமது நடவடிக்கைகளை விவேகத்தோடு வழி நடத்துவதும், தமக்கு விழிப்புணர்வைப் போதிப்பதும், தம்மோடு எப்போதுமே ஒளிவு மறைவற்ற, துணிவாற்றல்மிக்க சத்தியத்தின் மொழியிலேயே பேசி வருவது மான இந்தக் கட்சியை மக்கள் எவ்வாறு நேசிக்காமலும் பின்பற்றாமலும் இருக்க முடியும்? தமது நல்வாழ்வையும் மகிழ்ச் சியையும் பற்றிய அக்கறையையே, தனது நடவடிக்கைகள் அனைத்தையும் கொண்டு செலுத்திவரும் தலையாய நியதியாகக் கொண்டுள்ள ஒரு கட்சியை மக்கள் எவ்வாறு நேசிக்காமலும் பின்பற்றாமலும் இருக்க முடியும்? மக்கள் தமது கட்சியை எல்லை யற்ற விசுவாசத்தோடு நேசிக்கத்தான் செய்கின்றனர்; அவர்கள் கட்சியில் தெள்ளத் தெளிவான, கூட்டு ஞானத்தில் நம் பிக்கை வைக்கின்றனர்; அதன் நடவடிக்கைகள் யாவற்றுக்கும் பூரண ஆதரவை வழங்கவும் அவர்கள் எப்போதும் தயாராகவே உள்ளனர். சோவியத் மக்கள் தாம் பெற்றுள்ள வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றிகளின் ஒ ளி ம ய ம ா ன சிகரங்களிலிருந்து, தமது பதாகையை ஏந்திச் செல்லும் கட்சியின் தலைமையின் கீழ் தாம் நடந்து கடந்து வந்துள்ள பாதையை நியாயமான பெரு மித உணர்வோடு ஏறிட்டுப் பார்க்கின்றனர், ' ஒரு கம்யூனிச சமுதாயத்தை நிறுவும் தமது மாபெரும் குறிக்கோளைத் தாம் அடைய முடிவதற்கு முன்னால், தாங்கள் இன்னும் எவ்வளவோ

சாதிக்க வேண்டும் என்பதையும், பல பின்னடைவுகளையும்

198