பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனையில், முதல் உல கயுத்தம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் விளைவாக வாழ்க்கையிலும், அன்றாட நடவடிக்கைகளிலும், மனித மனோபாவத்திலும் நிகழ்ந்துள்ள பிரம்மாண்டமான மாற்றங்களை ஆங்கில வாசகர்கள் கண்டுணர்ந்து கொண்டால் நான் மகிழ்ச்சியடைவேன். நான் என்முன் நிறுவிக் கொண்டுள்ள பணியானது முதலாம் உலக யுத்தம் மற்றும் புரட்சி ஆகியவை நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த டான் பிரதேச மக்கட் தொகையின் பல்வேறு சமூகப் பகுதியினரை வெறுமனே இனம் காட்டுவது மட்டுமோ அல்லது 1974-க்கும் 1921-க்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களின் வலிமைமிக்க சூறாவளிக்குள் சிக்கிய ஆடவர் பெண்டிரின் துன்ப மயமான வாழ்க்கைகளை வெறுமனே தொட்டுக் காட்டுவது மட்டுமோ அல்ல; அது சோவியத் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப் பட்ட ஆக்கபூர்வமான நிர்மாண ஆண்டுகளிலும் இந்த மக்களை இனம் காட்டுவதும் ஆகும். கன்னி நிலல் உழப்பட்டது* என்ற எனது கடைசிப் புத்தகத்தை இந்தப் பணிக்குத்தான் ஈடு படுத்தியுள்ளேன். இறுதியாக நான் பின்வருவனவற்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்: ஆங்கிலப் பத்திரிகை மதிப்புரைகளில், எதார்த் தத்தை நான் “'கொடூரமாக 'ச் சித்திரிப்பதற்காகக் கண்டிக்கப் படுகிறேன் என்று நான் பலமுறை கேள்விப் படுகிறேன். சில விமர்சகர்கள் பொதுவாக 4 'ரஷ்யப் பழக்க வழக்கங்களின் கொடூர * த்தைப் பற்றியும் கூறியுள்ளனர், இதில் முதலாவது விஷயத்தில், நான் அந்தக் கண்டனத்தை ஏற்றுக் கொள்கிறேன்; ஏனெனில் உண்மைக்குக் குந்தகமான விதத்தில் எதார்த்தத்தைப் பூசிமெழுகி எழுதும், வாசகர்களுக் கேற்பத் தன்னைச் சுதாரித்துக் கொள்ள விரும்பும் காரணத் தினால், தனது வாசகர்களின் உணர்ச்சிகளை உலுக்காது விட்டு விடும் ஓர் எழுத்தாளன் மோசமான எழுத்தாளனேயாவான் என்றே நான் கருதுகிறேன், எனது நாவல் சிலபேர் தமது' சாப்பாட்டுக்குப் பின்னர் சிறு தூக்கம் போடுகின்ற நேரத்தில் வாசிக்கின்ற அத்தகைய புத்தகங்களில் ஒன்றல்ல; அவற்றைப் படிப்பதன் ஒரே நோக்கம் உண்டது செரிக்க அவை உதவும் என்பது தான். | * இந்நாவலின் முதற்பாகம் **நிலம் எனும் நல்லrth"! என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது, வெளியீடு; புதுமைம் பதிப்புதம், இதன் இரண்டாம் பாகம் "கன்னி நிலம்: ** என்ற தலைப்பில் வெளிவந் துள் ளது. ளிெயீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழாக்கம்: தா. பாண்டிய: 6:5v..

225

225