பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • *2*340

. இதே மாதிரியான நிலைமை எழுத்தாளர்களான எங்களுக் கும் சம்பவிக்கிறது, கிராமப்புற உலகை அடிப்படையிலேயே மாற்றியமைத்த நிகழ்ச்சிகளின் - ஒரு வர்க்கம் என்ற முறையில் குலாக்குகளின் ஒழிப்பு, பெருவாரியான கூட்டுடைமையாக்கம், கூட்டுப் பண்ணைகளில் ஒன்றுபடுவதற்கான விவசாயிகளின் வெகுஜன இயக்கம் ஆகியவற்றின்-சுவட்டின் சூட்டிலேயே, 1930-ல் நான் எனது கன்னி நிலம் உழப்பட்டது என்ற நாவலை எழுதத் தொடங்கினேன். இந்த அனுபவங்களை நினைவில் பசுமையாக நிறுத்திக் கொண்டு நான் எனது நாவலை எழுத உட்கார்ந்தேன். ஆனால் முதல் பாகத்தை எழுதி முடித்த பிறகு, நான் எதை விவரித்துக் கொண்டிருந்தே னோ அது இனியும் அந்தத் தருணத்தின் அடிப் படையான அக்கறையாக இருக்க வில்லை என்பதையும், எனது வாசகர் க ளின்' , முக்கியமாக நான் யாரைப்பற்றி எழுதிக் கொண்டிருந்தேனே) அந்தக் கூட்டுப் பண் ணை வாசகர்களின் மனத்தில் அப்போது வேறு பிரச்சினைகள் மேலோங்கி நின்றன என்பதையும் உணர்ந்தேன். சம்பவங்களோடு நேரிணையாகப் போய்க் கொண்டிருப்பது என்பது எங்கள் பணியை மிகவும் சிரமமாக்கி விடுகிறது. சரி, இப்போது இலக்கியப் படைப்பின் தரத்தைப்பற்றி ஒரு வார்த்தை . காங்கிரசுக்குப் பின்னால் எங்களில் ஒவ்வொரு வரும் இந்தக் கேள்வியை அதியவசரமாக எதிர்நோக்க நேர்ந்தது: சிறந்த புத்தகங்களை எழுதுவது எப்படி? காங்கிரசில் 5எழுத்தாளர்களைத் தவிர, வாசகப் பெருமக்களையும், கூட்டுப் பண்ணை விவசாயிகளையும், ஆலைத் தொழிலாளர்களையும், செஞ்சேனையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களும் கலந்து கொண்டவர். அவர்களும் பேசினர்; ஒருவர் பின் ஒருவராக வந்து தமது கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர்; உண்மையாகச் சொன்னால், அவர்கள் கொடுத்த கணக்கு, நாங்கள் எட்டின மட்டும் பார்க்கக் கூடிய எதிர்காலத்துக்குள் எங்களால் பைசல் செய்யவே இயலாது போகும் அளவுக்கு, அத்தனை பெரும் அளவில் இருந்தது. நாங்கள் நன்றாக வேலை செய்யவில்லை யென்றும், எங்கள் மொழி விஷயத்தில் நாங்கள் போதிய இர;மங்களை எடுத்துக் கொள்ளவில்லையென்றும், ஆரம்ப எழுத்தாளர்கள்-- அவர்களும் பெரும் அளவிலேயே இருக் இன்றனர்-ஏதாவது கற்றுக் கொள்வதானால், எங்களது நூல்களி லிருந்து எதையும் கற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினம், என்றும் அவர்கள் கூறினர். மேலும் உண்மையில் ஒவ்வொரு

தொழிற்சாலையிலிருந்தும், ஒவ்வொரு கூட்டுப் பண்ணையி

233