பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கம் போவதைத் தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும்போது, பிரதிநிதிகளில் ஒரு வர் எனது சட்டைக் கையைப் பிடித்து என்னைத் தடுத்து நிறுத்தி, ஏன் புத்தகங்களை யே காணோம்? எழுத்தாளர்களின் பேனாக்கள் வறண்டுபோய் விட்டன வா? என்று கேட்பதற்கு முன்னால் நான் அங்கிருந்து அவசரம் அவசர மாக நகர்ந்து வந்து விடுகிறேன். “தோழர்களே, இத்தகைய பேச்சு ஓர் எழுத்தாளன் கேட்ப தற்குரிய அத்தனை இனிமையான பேச்சல்ல. இதனை நீங்களே நன்கு புரிந்து கொள்ள முடியும். “தோழர்களே, இது ஒரு புறமிருக்க, துர்ப்பாக்கிய வசமாக, நாம் எப்போதுமே நன்றாக எழுதி விடுவதும் இல்லை. சோவியத் இலக்கிய வாழ்வின் இருபதாண்டுக் காலத்தில் நாம் ஏதோ கொஞ்சம் சாதித்திருக்கிறோம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த வெற்றிகளை அங்கீகரிக்கும் முகமாக, அரசாங்கம் நமது எழுத்தாளர் பலருக்கு விருதுகளைப் பரிசாக அளித்துள்ளது. இதுவரையில் ரஷ்ய மக்களுக்குத் தெரிய வராதிருந்த, நமது சோதரத் தேசியக் குடியரசுகளைச் சேர்ந்த கவிஞர்கள் மற்றும் வசன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் இப்போது நாடு தழுவிய அளவில் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த எழுத்தாளர்களின் புதிய குரல்கள் - ரஷ்ய இலக்கியத்தின் குரலோடு ஒன்று கலந்து அதனை வளப்படுத்தியுள்ளன; அதனை ஓர் உண்மையான சர்வதேச இலக்கியமாக ஆக்கியுள்ளன.

    • தமது எளிமையால் உள்ளத்தை அத்தனை தூரம் கவரும்

ஜாம்புல்லின் காவியப் பாடல்களால் இதயம் நெகிழாதார் நம்மில் யாரேனும் உண்டா ? ஜார்ஜியக் கவிதைகளின் மயக்கும் இனிமையால் நாம் கவரப்பட்டதில்லையா? சுலெய்மான் ஸ்தால்ஸ்கியின் புதுமையான, இனிய நாதமிக்க பாடல் வரி களின் கவர்ச்சிக்கு நாம் ஆட்பட்ட தில்லையா? இவை மொழி பெயர்ப்பில் தமது மூலத்தின் எழில் வனப்பை ஓரளவு இழந்து " விட்ட போதிலும்கூட, இந்த எழுத்தாளர்களின் வார்த்தைகள் நமது இதயத்துக்குள் நேராகப் புகத்தான் செய்தன.....,

    • தோழர்களே, சோவியத் எழுத்தாளர்க ளுக்கும் வாசகர்

களுக்கும் இடையே நிலவும் உறவுகள், முதலாளித்துவ நாடுகளில் நிலவும் உறவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் நமது கலையின் மூலம் எந்த மக் களுக்குப் பணி புரிகிறோமோ, அந்த மக்கள் நம்மைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க என்றுமே. தயங்குவதில்லை. தாம் விமர்சிக்கப்படுகிறோம்; அவசியம் நேரும்போது

245

245