பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியிருக்கிறான் ; இது ஒரு நல்ல புத்தகம்தான்! என்று அவர் நூலாசிரியரைப் பற்றிக் கூறுவாரேயானால்-இது தான் எழுத் தாளருக்கு மிக வுயர்ந்த தார்மிகமான மனநிறைவையும் கைம்மாறையும் கொடுக்கும்; ஏனெனில் அவருக்கு வாசகர் தான் தலையாய நீதிபதியாவார், அருகிலும் தொலைவிலும் உள்ள நமது வாசகர்கள், சோவியத் இலக்கியம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றின் வருங்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்து பார்க்கும்போது, சோவியத் எழுத்தாளர்கள் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் -- நமது மக்களின், நமது மாபெரும் கட்சியின் நலன்களுக்காகப் பணிபுரிவது என்ற நோக்கத்தைத்தான், கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. 1953 உக்ரேனிய மக்களே! உங்களுக்கு ஆனந்தம் கிட்ட வாழ்த்துகிறேன்! தனது நினைவுச் சின்னங்கள், பூங்காக்கள், தோட்டங்கள், தன து; எழில் மிக்க கட்டிடங்கள் மற்றும் வீதிகள் ஆகியவற்றோடு விளங்கும் புராதனமான கீவ் நகரத்தின் கம்பீரமான தோற்றத் தைக் கண்டு நான் மயங்கியுள்ளேன். கார்களும் மக்களும் தங்கு தடையற்ற பிரவாகம் போல் செல்லும் அந்நகரின் பிரதான வீதியான கிரெஷ்சத்திக் வீதி வியத்தகும் எழில் மிக்கதாக உள்ளது. புதிதாக ஒருவரின் வியப்புற்ற பார்வையின் முன் னால், இரண்டு கீவ் நகரங்கள்-ஸ்லாவ் மக்களின் பிள்ளைத் தொட்டி லான கீவ், மற்றும் நமது கண் முன்னாலேயே அற்புதமாக விரி வடைந்து வரும் புதிய சோவியத் நகரமான கீவ் ஆகியவை- எழுந்து வருவது போல் தோற்றுகின்றன, நமது இதயத்தின் அடியாழத்தையே தொட்டுலுப்பும் மந்திரக் கவர்ச்சியைக் கொண்ட இந்த நகரத்தின் மீது நாம் எவ்வாறு காதல் கொள்ளாமல் இருக்க முடியும்! நீப்பர் நதிக்குச் செல்லும் சரிவுகளிலும், நதிக்கரைப் படிக் கட்டிலும், ஆற்றுக்கு மறுபுறத்தில், மிகமிகத் தொலைவில், அடி வானத்தையொட்டி எழுந்து நிற்கும் கானகத்தின் அந்த இருண்ட வரி வடிவங்களிலும்தான் எத்தனை இயம்பப்படாத எழில் குடி கொண்டிருக்கிறது! எனது சொந்த அமைதியான டான் நதியைப் போலவே, மாபெரும் நீப்பர் நதியும் என் இதயத்துக்கு அருமை மிக்கதேயாகும். இப்போதோ, திறமைமிக்க கடின உழைப்பாளிகளான

உக்ரேனிய மக்களின்பாலும், சோவியத் சோதரத் தேசங்களின்

262