பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கப் போவதில்லை. நீங்கள் புத்திக் கூர்மையும் திறமையும் மிக்க எழுத்தாளர்; மேலும் தொழிலாளர் பற்றிய கருப் பொருள் உங்களைக் கவர்ந்துள்ளது. எனவே நீங்கள் ஏன் மாக்னிதோ கோர்ஸ்க், ஸ்வெர்த்லோவ்ஸ்க், செல்யாபின்ஸ்க் அல்லது ஜபோரோழ்யி ஆகிய இடங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று, அங்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வாழ்ந்து, தொழிலாளி வர்க்கத்தைப்பற்றி ஏன் ஒரு நல்ல நாவலை எழுதி முடிக்கக் கூடாது? என்று நாம் சரியா 33 சமயத்தில் ஃபதயேவுக்கு எச்சரிக்கை செய்திருக்க முடியாதா, என்ன? இதனால் ஃபதயேவ் பொதுச் செயலாளராக இருந்து வரும் சந்தர்ப்பத்தை நாம் இழக்க நேர்ந்திருந்தால், அது மிகவும் அற்பமான விஷயம்; ஏனெனில் நாம் எழுத்தாளரான ஃபதயேவை மீண்டும் பெற்றிருப்போம்; ஒரு புதிய புத்தகத்தோடு, அநேகமாக அவரது முதில டிப்பு போன்ற நல்லதொரு நூலோடு, நாம் அவரைத் திரும்பவும் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்போம், கடந்த பதினைந்தாண்டுக் காலத்திய! ஃபதயேவ் என்னதான் செய்தார்? அவர் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எழுத்தாளர் யூனியனுக்கு வழிகாட்டினாரா? இல்லை. கட்சிதான் நமக்கு வழிகாட்டுகிறது என்றுதான் நாம் எப்போதும் சரியான காரணத்தோடு கருதி வந்துள்ளோம். இலக்கிய விவாதங்களில் கலந்து கொள்வது, அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, எழுத்தாளர் களுக்குக் குடித்தனப் பகுதிகளை ஒதுக்கீடு செய்வது முதலியவற்றில் தான் ஃபதயேவ் ஆண்டுக்கணக்காக மும்முரமாக ஈடுபட்டிருந் தாரேயன்றி, அவர் என்றுமே ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை . புத்தகங்களை எழுதுவது போன்ற உதவாக்கரை” வேலையில் ஈடுபட அவருக்கு நேரமே இருக்கவில்லை, ஆனால் 1944 முதற் கொண்டு அவரை அவரது செயலாளர் வேலை களிலிருந்து சில ஆண்டுகளுக்கு விடுவிக்கப்பட்ட போதோ, அவர் உடனே எழுத்துப் பணியில் ஈடுபட்டார்; மிகவும் குறுகிய காலத்தில் கிராஸ்னோதானைச் சேர்ந்த இளைஞர் படையைப்பற்றி ஓர் அற்புதமான புத்தகத்தையும் எழுதி முடித்தார். உள்ளத்தைக் கிளறும் உணர்ச்சியோடு இளம் மக்களைப் பற்றி எழுதுவதில் ஃபதயேவுக்குள்ள அற்புதமான திறமையைப் போன்ற எதையும், வசன இலக்கிய எழுத்தாளர்களான நம்மில் எவரும் பெற்றிருக்க வில்லை; இளைஞர் படை*யில் அவரது பெருந்திறமையின் இந்தப் போக்கு பூரணமாகப் புலனாயிற்று.

  • இந் நாவல் இதே தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. வெளியீடு : நியூ

செஞ்சூர் 114 ஓஹவுஸ், தழோக்கம்: டி. ஆர், ஈசேகர். ' க.. சுக்கா

,

297