பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணமாக, வால்கா பிரதேசத்தைச் சேர்ந்த மனிதரான பான்ஃபெரோவ், வால்கா நதிக்கரைகளில் சில ஆண்டுகள் வசித்து, இந்த மாபெரும் நதி, "வால்கா மாதாவே தவிர, மூன்று முறை பிரிந்துபோன ஓர் அத்தைக்காரியல்ல என்று வாசகர்களும் உணரும் விதத்தில், ஒரு நாவலை ஏன் எழுதக் கூடாது? , அப்பழுக்கற்ற ரஷ்ய மொழியில் அற்புதமான சொல்லாட்சித் திறனும், மிக மிக நுண் மையாகக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் படைத்த எழுத்தாளரான பாஸ் தோவ்ஸ்கி, இங்கு தோழர் லாரியானோவ் மிகவும் மனத்தைக் கவரும் விதத்தில் வருணித்துக் கூறிய மெஷ் செரா சமவெளிப் ' பிரதேசத்துக்கு ஆண்டுதோறும் வந்து செல்வதை ஒரு வழக்க மாகக் கொண்டிருக்கிறார். ஓகா நதிக்கரையில் எங்காவது ஓரிடத்தில் பாஸ்தோவ்ஸ்கியைக் குடியமரச் செய்வதற்கு ஏன் உதவக் கூடாது? தூண்டில் போட்டு மீன் பிடிப்பதைப் பொழுது போக்காகக் கொண்டுள்ள பாஸ்தோவ்ஸ்கிக்கு நெடு நேரமாக மீன் எதுவும் சிக்காது போகுமாயின், அவர் தம்மைச் சுற்றி யுள்ள கூட்டுப் பண்ணை உலகத்தை ஒரு கலைஞரின், அக்கறைமிக்க பார்வையோடு கூர்ந்து கவனிப்பார் என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். இதனால் எழும் சிந்தனைகள் உண்மையிலேயே நல்ல தொரு புத்தகத்தைத் தோற்றுவிக்கும் வாய்ப்பை வழங்கும் . பெர்வெந்த்சேவும் கூட, சிறிது காலத்துக்கு மாஸ் கோகே> வ விட்டு வெளியேறி, தமது சொந்த நாடான கூபான் பிரதேசத்தில் மீண்டும் குடியேறலாம், திறமை வாய்ந்த கவிஞரான செர்கி வாஸில்யேவ் குர்கா பிரதேசத்திலுள்ள தமது பிறந்த ஊருக்குச் சென்று, சிறிது காலம்தான் தங்கித் திரும்பினார்; எனினும் வரும்போது அவர் சில நல்ல கவிதைகளைக் கொண்டு வந்தார். அவர் அங்கு அதிகமான காலம் தங்கியிருப்பாரேயானால், அவர் ஒரு பெரிய கவிதைத் தொடரையே அல்லது ஒரு நெடுங் கவிதையையே உருவாக்குவார். அல்த்தாய் பிரதேசத்திலிருந்து வந்துள்ள பெர்மித்தினும் கூட தமது சொந்தப் பிரதேசத்துக்குத் திரும்பிச் செல்வதால், நன்மையே தவிர தீமை விளையாது; அவ்வாறு சென்றால், சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் மற்றொரு புத்தகத்தை எழுதும் விதத்தில் வளம் பெற்று விடுவார், தமது தங்கத் தாரகை தாங்கியவர் என்ற நூல் தமக்கு நாலா வது ஸ்டாலின் பரிசைக்கூடக் கொண்டு வராது என்று முற்றிலும் சரிவரவே தீர்மானித்துக் கொண்ட பாபாயேவ்ஸ்கி, மூன்றாண்டுகள் தங்கியிருந்து திரும்புவதற்குச் சீனாவுக்குப் போயிருக்கிறார் என்று வதந்தி. அதுவும் நல்ல துதான். நமது

நண்பர்களான சீன விவசாயிகளைப் பற்றிய ஒரு நல்ல நாவலோடு

302