பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாண், செல் முதல் கூறியுள்ளவை, இளம் எழுத்தாளர்களில் மிகவும் திறமை படைத்தவர் களுக்கும் முற்றிலும் பொருந்தும்; ஒரே வித்தியாசம் என்னவெனில், அவர்களுக்கு மேலும் அதிகமான நிதியுதவி தேவைப்படும்; அத்துடன் அவர்களை மிகுந்த கவனத்தோடும் கையாண்டு வரவேண்டும். அவர்களில் அநேகமாக எல்லோருமே வாழ்க்கைச் செலவுக்காக ஏதாவதொரு வேலையைச் செய்து வருகிறார்கள் ; தமது முதல் பெரிய நாவலை அல்லது சிறு கதைத் தொகு தியை எழுதி முடிப்பதற்காக, அவர்கள் தமது வேலையை விட்டு விலகினால், அவர்கள் மிகவும் சங்கடமான நிலை.ை) களுக்கே உள்ளாக நேரிடும். அவர்களிற் சிலருக்கு உதாரண பாக, பள்ளி ஆசிரியர்களுக்குத் தமது பள்ளியைவிட்டு விலக வேண் டியது தவிர்க்கொத்தாகிவிடும்; ஏனெனில் ஒரே சமயத்தில் பள்ளி ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்து வருவது அசாத்தியம், நமது பள்ளி ஆசிரியர்களின் வேலை ந rasi எத்தனை பயங்கரமான அளவுக்கு வேலைப்பளு மிக் கதாக உள்ளது என்பதை ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் ஒவ் வொருக்கும் கூட, இது தெள்ளத் தெளிவாகப் புரியும். முதலாவது எழுத்தாளர், காங்கிரசுக்குப் பின்னால் கார்க்கி இவ்வாறு கூறினார்: ' * அற்./தமான எழுத்தாளர்களின் ஒரு பெரும் பட்டாளத்தையே நாம் உருவாக்க வேண்டும்- ஆம், நாம் உரு வாக்கியாக வேண்டும்! பிரதிநிதித் தோழர்களே, கார்க்கியின் இந்த வார்த்தைகளை நாம் என்றுமே மறந்துவிடக் கூடாது. கார்க்கி இறந்தபோது, செர்ஜியோவ்-திசென்ஸ்கி, பிரிஷ்வின், சொரஃபிமோவிச், யாகுப் ேக எ ல IT ஸ் , கிளாத்கோ, ஓல்கா ஃபோர்ஷ், மரீத்தா ஷாகின்யான், வெரேசயேவ், அலெக்சி டால்ஸ்டாய், நோவிகோவ்- பிரிபோய், ஷிஷ்கோவ் போன்ற எழுத்தாளர் களும் பிறரும் இருந்து வந்தனர் என்பதை நினைவு கூருங்கள். அவர்கள் முதுபெரும் எழுத்தாளர்கள். ஏனையோர் பின்னர் இந்த அணி களில் சேர்ந்தனர்; அவர்களே இன்று மிகவும் பிரபலமாகவுள்ள எழுத்தாளர்கள்; எனினும் அவர்களில் மிகமிகக் குறைந்த வயதுடையவருக்கும் கூட, வயது ஏற்கெனவே ஐம்பதைத் தாண்டி விட்டது. நமது அணிகளில் புதிதாக வந்து சேர்வோர் மிக மிக மெதுவாகத்தான் வந்து சேர்கின்றனர், 1936-ல், கார்க்கி மரணமடைந்த ஆண்டில் இருந்ததைக் காட்டிலும், இன்று இளம் எழுத்தாளர்கள் குறைவாகத்தான் உள்ளனர், எனவே வருங்கால நூலாசிரியர்களைப் பயிற்றுவிப்பதில் நமக்குள்ள பொறுப்பு மிகமிகப் பெரிதாகும். எழுத்தாளர்கள் மெதுவாகத்தான் வளர்கின்றனர்; - வெறுமனே ஆறாவது

304

304