பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு கேட்கிறார்கள்; சோஷலிச எதார்த்தவாதம் என்பது தான் என்ன? இது விஷயத்தில் நான் சித்தாந்தி களது விளக்கங் களை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து, அவற்றையே திருப்பிக் கூறத் துணியவில்லை. மேலும், விஞ்ஞான பூர்வமான சூத்திரங்கள் எனது பலம் வாய்ந்த வாதக் கூறு அல்ல. மாறாக இதற்குப் பதிலாக நான் இவ்வாறு கூறுவதே வழக்கம். அதாவது சோஷலிச எதார்த்த வாதம் என்பது வாழ்வின் உண்மையை, லெனினியச் சார்பு நிலை நிலைகளிலிருந்து கலைஞன் ஒருவன் புரிந்து கொண்டு அர்த்தப்படுத்தும் உண்மையைச் சித்திரித்துக் காட்டும் ஒரு முறையேயாகும். இன்னும் கூட எளிதாகச் சொன்னால், அது ஒரு புதிய உலகைக் கட்டியமைக்க மக்களுக்குச் செயலூக்கத் தோடு உதவிவரும். ஒரு முறையேயாகும் என்றே நான் கருது கிறேன். ' சோஷலிச எதார்த்தவாதம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள நேர்மையோடு விரும்பும் எவரும், சோவியத் இலக்கியம் அதன் ஐம்பதாண்டுக் கால வாழ் நாட் காலத்தில் சேகரித்துள்ள பரந்த அனுபவச் செல்வத்தைக் கூர்ந்து ஆராய் வேண்டும். உண்மையில் இந்த இலக்கியத்தின் வரலாறானது, அதன் கதா நாயகர்களின் கண்கண்ட வடிவங்களிலும், மக்களது முயற்சியின் கண்கண்ட சித்திரங்களிலும் குடிகொண்டுள்ள சோஷலிச எதார்த்தவாதமேயாகும், சோவியத் இலக்கியமும், குறிப்பாக அதன் பிரதானப் படைப் பிரிவுகளில் ஒன்றான ரஷ்ய இலக்கியமும் நடந்து கடந்து வந்துள்ள மகோன்னதமான மார்க்கமானது , வருங்காலத்தைப் 4பற்றி நான் விவாதிக்கப் புகும் இந்நாளில், நமது மனக் தண் முன்னால் கடந்து செல்லட்டும். நாம் சேகரித்துக் ' குவித்துள்ள செல்வம் மிகப் பெரியதாகும். நாம் பெருமைப்படு வதற்கும், உரத்த, எனினும் மலடு தட்டிப்போன சூட்சுமார்த்த வாதத்தை எதிர்ப்பதற்கும் நம்மிடம் விஷயம் உண்டு. மேலும், மக்களது நம் பிக்கையை நியாயப்படுத்துவதற்கு, நாம் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் காண பூமடிந்த போதிலும், நமது பணியில் நாம் இன்னும் திருப்தி யற்றவர்களாகவே இருக்கக்கூடிய போதிலும், மனித குலத்தின் ஆன்மிக மதிப்புக்களின் செல்வக் களஞ்சியத்துக்கு நமது இலக் கியம் ஆற்றியுள்ள பங்கையோ, அது உலகெங்கணும் அனுபவித்து வரும் மறுக்கொ ணாத செல்வாக்கையோ நாம் என்றுமே மறந்து, விடக் கூடாது. அன்பார்ந்த தோழர்களே! ரஷ்ய சமஷ்டியின் எழுத்தாளர்கள்தான் தமது சொந்தக் 338