பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா க ஸ்டாக்ஹோம் வருமாறு நீங்கள் விடுத்துள்ள அன்பான அழைப்பையும் நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்கிறேன். 1965- "பிராவ்தா"வுக்கு நோபெல் பரிசு பெற்றுள்ளமைக் காக எனக்கு வாழ்த்துரைத் துள்ள எனது எல்லா சோவியத் மற்றும் அயல்நாட்டு வாசக நண்பர்களுக்கும், எல்லா ஸ்தாபனங்களுக்கும் தனி நபர்களுக்கும் நான் உளமார நன்றி கூறிக் கொள்கிறேன், 1965 " பிரஎய்தா” நிருபருக்களித்த ஒரு பேட்டி நோபெல் பரிசு பெற்றது குறித்து நீங்கள் எவ்வாறு உணர் - இறீர்கள்? எனக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து நான் இயல்பாகவே மகிழ்ச்சியுறுகிறேன்; எனினும் எனது உணர்ச்சிகளைச் சரிவரப் புரிந்து கொள்ளுமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்; நான் உணர்வது ஒரு தனி நபரின், இந்த மிகவுயர்ந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நூலைப் படைத்த ஒரு தொழில்முறையான எழுத்தாளரின் சுய- மன நிறைவு உணர்ச்சி அல்ல, எனது உணர்ச்சிகளில் மேலோங்கி நிற்பது என்னவெனில், எனது நாட்டுக்கும், நான் எந்தக் கட்சியின் அணிகளில் எனது வாழ்க்கையின் செம்பாதிக் காலமாக இருந்து வந்துள்ளேனோ அந்தக் கட்சிக்கும், நமது சோவியத் இலக்கியத்துக்கும்தான், மேலும் கீர்த்தியைச் சேர்ப்பதில், மிகவும் சிறிய அளவிலாயினும், நானும் ஏதோ பங்காற்றியிருக் கிறேன் என்ற எனது மகிழ்ச்சிகரமான பிரக்ஞையுணர்வே போகும். எனது சொந்த உணர்ச்சிகள் அனைத்தையும் காட்டிலும், இதுவே எனக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்கால உலகில் சில இலக்கியப் பிரமுகர் கள் எதன் வாழ் வைக் குறித்து ஆட்சேபித்துள்ளார்களோ அந்த நாவல் இலக்கிய வகையும், அதன் தர்ம நியாயமும் நிர்த்தாரணம் செய்யப்பட் டுள்ளது என்று கூற முடியும் என்று அறிவதனால் ஏற்படும் மன நிறைவும் எனக்குண்டு. நன்றாக எழுதப்பட்ட நூல் நெடுங்காலம் வாழ்ந்தே வருகிறது : 'வாழ்ந்து வரும் எதையும் , எந்தவொரு தக்க காரணமும் இல்லாமல் ஏற்க மறுத்துவிட முடியாது.