பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன், எனவே எல்லாம் ஒழுங்காய்த்தான் நடைபெற்று வருகின்றன! கஜாக் ஸ்டெப்பிவெ ளி பாழ்வெளி யாகக் காட்சியளிக்க லாம்; ஆனால் இங்கோ நாட்டில் வேறு எங்கணும் போலவே, வாழ்க்கை சுறுசுறுப்போடு பொங்கிப் பிரவகித்துக் கொண் டிருக்கிறது: இலையுதிர்கால உழவுக்கான கடைசி ஹெக்டர் , நிலங்கள்---இதுவே திட்ட இலக்குகளுக்கும் அதிகமானதாகும்- உழப்பட்டு வருகின்றன; கால் நடை மேய்ப்பர்கள் சிரமமான மா ரிக்காலத்தைச் சமாளிக்கத் தயாராகி வருகின்றனர்; பண்ணை எந்திர ஆப்பரேட்டர்கள்-இந்தப் பிரதேசத்திலேயே இவர்கள் தான் தலைசிறந்தவர்கள்-அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற் காக ஒன்றுகூடிக் கல ந்து பேசி வருகின்றனர். எனவே இங்கும் மக்கள், நாட்டின் பொருளாதார, கலாசார வளர்ச்சியின்பால் கட்சி கொண்டுள்ள அக்கறையினால் உத்வேகம் பெற்று, தமது திறமைக்கேற்ப மிகவும் சிறந்த முறையில் உழைத்து வருகின் றனர். கம்யூனிசத்தைக் கட்டியமைத்து வரும் இந்த வலிமை மிக்க மக்கள் கூட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய துளியாக நானும் இருப்பதை உணர்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபூர் 21, 1965 எதார்த்த வாதத்தின் ஜீவபலம் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், எனக்கு நோபெல் டாரிசை வழங்கியமைக்காக, ஸ்வீடிஷ் ராயல் அகாடமிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுவது எனது மகிழ்ச்சிகரமான கடமையாகும் என நான் கருதுகிறேன். இந்தக் கெளரவம் எனக்கு மனநிறைவு உணர்ச்சியை அளித்ததற்கு, இது எனது தொழில்முறையான தகுதிகளுக்கு அல்லது ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கேயுரிய தன்மை க ளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சர்வதேச அங்கீகாரமாகும் என்பது மட்டும் காரணம் அல்ல என்பதைப் பகிரங்கமா கக் கூறும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்கெனவே கிட்டியுள்ளது. இந்தப் பரிசு ஒரு ரஷ்யருக்கு, ஒரு சோவியத் எழுத்தாளருக்கு வழங்கப் பட்டுள்ளது என்பதில் நான் பெருமையடைகிறேன். எனது நாட்டில் பல எழுத்தாளர்கள் உள்ளனர்; அவர்களைத்தான் நான் இங்கு பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் ஏற்கெனவே கூறியுள்ளதுபோல், இந்தப் பரிசு நாவல் இலக்கிய வகைக் கான-மறைமுகமானது தான் என்றலும்- மற்றொரு உறுதிச்சான்றாக விளங்குகின்ற காரணத்தாலும், நான்