பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ற ஆண்டு வோல்கோ கிராடில் சுத்தம் செய்யப்படாத கழிவு நீர், அலட்சியத்தினாலோ அல்லது பாதுகாப்பு அமைப்புக் களைத் திட்டமிடுதலில் நேர்ந்த கவனக் குறைவினாலோ, ஏதோ ஒரு தொழிற்சாலையிலிருந்து லால்கா நதிக்குள் பாய அனுமதிக்கப்பட்டு விட்டது. இதனால் ஆற்று நீர் - அசுத்தப் படுத்தப்பட்ட இடத்திலிருந்து நானூறு கிலோ மீட்டர் வரை யிலும் நதியின் மீது செத்த மீன்கள் மிதந்து கொண்டிருந்தன. கட்டுப்பாட்டு நிலையங்களில் பதிவு செய்புப்பட்ட கணக்குப்படி இதனால் ஏற்பட்ட இழப்பு மொத்தத்தில் 84 2,000 ஸ்டர்ஜன் வகை மீன்களும் (பல்வேறு வகையான ஸ்டர்ஜன் மீன்களும்), 735,030 செதில் மீன்களும், கணக்கிட முடியாத அளவிலான சிறு மீன்களும், மீன்குஞ்சுகளும், மீன் சினை களும் ஆகும். இதனால் நமது தேசப் பொருளாதாரத்துக்கு நேர்ந்த சேதம் 110 லட்சம் ரூ பிள்கள் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செத்துப்போன பின் ஸ்டர்ஜன் மீன்களில் ஒரு சரிபாதியளவு நீர்ப்பரப்பின் மீது மிதக்கா மல், நீருக்கடியில் அடிமட்டத்துக்குத் தாழ்ந்து போய்விடுகின்றது என்பதைக் கருதிப் பார்க்கும்போது , நேர்ந்த சேதத்தைக் குறைந்தபட்சம் இருமடங்காகவே கொள்ள முடியும். சரி, நாம் பைகால் ஏரி விஷயத்துக்கு மீண்டும் வருவோம். இதனைக் குறித்து எவ்வளவோ பேசப்பட்டும் எழுதப்பட்டும் உள்ளது. ஆயினும் பத்திரிகைகளில் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கைகள் எப்போதுமே பொருட்படுத்தப்பட்டு விடவில்லை. வால் கா நதி விஷயத்தில் இப்போது நடந்துள் 6krதைப் போல், இதே காரியம் பை கால் விஷயத்திலும் நிகழுமானால் என்ன நேரும்? பைகால் ஏரியைச் சுற்றிலுமுள்ள காடுகளை வெட்டித் தள்ளி, அங்கு காகிதக் கூழ் மற்றும் காகித ஆலைகளைக் கட்டி யமைக்கும் யோசனையைக் கைவிடவும், அதற்கான துணிவை நாம் பெறவும், அதற்குப் பதிலாக , இந்த ரஷ்ய இயற்கைச் செல்வக் களஞ்சியத்தின் உயிர் வாழ்க்கையை' அச்சுறுத்தாதி வகையிலான தொழிற்சாலைகளைக் கட்டியமைக்கவும். நாம் முனையத்தான் வேண்டுமா? எவ்வாறாயினும், பைகாலைக் காப்பாற்றுவதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தே ஆக வேண்டும். ரஷ்யாவின் ** கீர்த்தி மிக்க கடலான, புனித பைகாலை* *ப் பத்திரமாக வைத்திருக்க நாம் தவறி விட்டால், வருங்காலம் நம்மை மன்னிக்காது என்றே நான் அஞ்சுகிறேன். தோழர்களே, ஒரு சொந்தப் பிரச்சினை யையும் நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். அமைதியான டான் நதி அழியப்