பக்கம்:இந்தியா எங்கே.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 129

பொன் :

இன்ப

போதுமா?

ஒகோ, போதும். போதும் போ. போ-அடுத்த கப்பலில் இத்தகைய அழகிய அடிமைகளோடு வர வேண்டும் தெரியுமா? போ. போ அடே, பெண்ணே, ஆடு.

(গুcেক্ত ৪ ৫৫থ)

காட்சி - 4

இடம் : கடற்கரை காலம் : மாலை

(காற்று வசதியாக வீசுவதால், தன் நாட்டிற்குச் செல்ல எண்ணமிட்ட பொன்மேனி, பணமூட்டைகளைப் படகோட்டி களின் தலையில் வைத்து படகினுள் அடுக்கச் சொல்லுகிறான்)

Li L-.

பொன் :

பொன் :

இதுக்குள்ள எவ்வளவு நாணயம் சுவாமி இருக்கு. கழுத்தையே ஒடிச்சுடும் போலிருக்குதே பாரம். அவ்வளவும் பத்தரைமாத்துத் தங்க நாணயமடா. இன்னும் இதைப்போல் எண்ணற்ற பைகளையும் தரக்காத்திருக்கிறார்கள். ஏன் சாமி! அடிமை வியாபாரம் பண்றது பாவம்னு சொல்கிறாங்களே சிலபேர்.

வியாபார அறிவில்லாத முட்டாள்கள் பேச்சுதங்கத்தின் எடையறியாத தரித்திரங்களின் பாட்டு. தங்கம்! உலகையே தன்வசமாக்கும் தங்கம்! பணம் பார்ப்பதை எல்லாம் அடிமையாக்கும் பணம். உலகத்தைக் கவரும் மாயா சக்தி. இது இல்லாதவன் நடைப்பினம். எப்பாடு பட்டேனும் இதைப் பெற்றவன் பெரியவன். அவன் தான் புண்ணியவான். அவன் எண்ணியதெல்லாம் நடக்கும். இதுவே என் தெய்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/131&oldid=537694" இலிருந்து மீள்விக்கப்பட்டது