பக்கம்:இந்தியா எங்கே.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் . 133

இன்ப

மன்

இன்ப

மன்

இதைச்சொல்லவா இத்தனை வாதமும் இவ்வளவு நேரமும்? அப்படியே செய்தால் போகிறது.

(மெதுவாக தனக்குள் அவ்வளவு அசட்டையா? (இன்பவாகனனை நெருங்கி அதிருக்கட்டும். உங்கள் மைந்தன் ஞானதேவனைப் பெற்றபின், அந்த அடிமைத்தாய் அடிக்கடியும் உங்கள் கனவில் வரும் வழக்கம் உண்டென்று சொன்னிர் களே! உம். இப்பொழுதும் அப்படித்தானே?

(இக்கேள்விக்கு பதில் சொல்லவகையின்றி திகைத்த இன்பவாகனனுக்கு, அலங்கோலமான ஒரு பெண்ணின் காட்சி மனத்திரையில் தோன்றி மறைகிறது. குழப்பத்தைச் சமாளித்துக் கொண்டு)

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அன்று மறைந்த உருவம் இப்போது வருவதே இல்லை. இந்தக் கேள்வி ஏன் இப்போது? மன்மதசகாயா! அந்தப் பரம ரகசியம் உன்னால் என்றும் பத்திர மாகக் காக்கப்பட வேண்டும். வீணாக என் ரத்த சம்மந்தமுள்ள சந்ததியைக் காட்டிக் கொடுத்து விடாதே. புகழின் வேரை வெட்டிவிடாதே. உமது ரகசியம் என்னால் காக்கப்படும். அதே போல் என்மகள் இன்பக்கொடி தான் உம் மைந்தனை மணந்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையை நீர் நிறைவேற்றினால் ஒழிய நாம் பேசிய நிபந்தனையெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகள். ஆகட்டும். இருவரும் அதற்காகவே முயல்வோம். இது உறுதி. - அப்படி வாருங்கள். பாம்பின் பாதை பாம்பறியும் என்பதை அறிந்திருந்தும் என்னையே ஆழம் பார்த்து விட்டீரே! அதுதொலையட்டும். எங்கே ஞானதேவன்? உமது மைந்தன்? எப்பொழுது வந்தாலும் காணுவதில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/135&oldid=537698" இலிருந்து மீள்விக்கப்பட்டது