பக்கம்:இந்தியா எங்கே.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மன்

இன்ப

மன்

இன்ப

ஞான

இன்ப

ஞான

நம் தாய்

பொறுப்பாளியல்ல. தயவு செய்து இந்த விடுதலை விழா முடியுமட்டும் பொறுமை யோடிரு. முடிந்ததும் சாவகாசமாக சமாதானம் செய்து இளவரசன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம்.

உறுதி தானே? முழு உண்மை.

மாறினால் என்பழி சீறியெழும். சரி புது அடிமை களை ஏலமெடுக்க வேண்டும். கடற்கரை மண்டபத்துக்குச் செல்வோமா.

நீ செல், வருகிறேன். (போகிறான் மன்மதன். ஞானதேவன் வருகிறான்)

அப்பா! நேர்மையில் களங்கமிருந்தால் தான் நெஞ்சு கலங்கிச் சாகவேண்டும். நீரேன் குமுற வேண்டும்? ஞானதேவா வீணாக மன்மத சகாயனுக்கு இடம் தராதே. நான் சொல்வதைத் தட்டாதே. இன்பக் கொடியை மணம் செய்துகொள். இந்நாட்டு இளவரசன் பதவியை ஏற்றுக்கொள்.

தாம் பயந்து ஏற்கச் சொல்லும் பதவிச் சிம்மாசனத்தின் கால்கள் குளிர் காய்ச்சலால் கடகடவென்று நடுங்கிக் கொண்டிருக்கும் போது நான் அதில் அமர்வது ஒரு வேடிக்கை யாகுமப்பா. * r சூரியனே நிரந்தரமாக உலகைவிட்டு அஸ்த மித்தாலும், நமது சாமராஜ்யச் செல்வாக்கு சிதறாத உருவடைந்திருக்கும் சீர்மையை உணராமல், சிறு பிள்ளைத் தனமாயிருக்கி றாயப்பா நீ ஏன், அப்பெண் இன்பக் கொடியை மனைவியாகக்கொள்ள நீ காணும் தடைதான் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/172&oldid=537738" இலிருந்து மீள்விக்கப்பட்டது