பக்கம்:இன்னமுதம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொது

புறச் சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மீண்டுவிட்ட திருநாவுக்கரசரை வெறுத்த பழஞ்சமயத்தார்கள் அரசனுடைய தயவைக் கொண்டு நாவுக்கரசரைப் பிடித்துவந்து கல்லிலே கட்டிக் கடலில் போட்டுவிட்டார்கள். இறைவனுடைய திருவருளால் அந்தக் கல்லே தெப்பமாக அமைந்தது. அக்கல்தெப்பத்தின் மேலே அமர்ந்து நாவுக்கரசர் பெருமான் திரு ஐந்து எழுத்தின் பெருமையை இப்பாடல் மூலம் கூறுகின்றார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

“சொல்லின் வடிவாகவும் சொல்லின் துணையாக உள்ள பொருள் வடிவாகவும் உள்ளவன்; (சொல்லின் பொருளாக உள்ள வேத முதல்வன்) ஒளி மயமாகவுள்ள வீடு பேற்றின் தலைவன்; அவனுடைய பொன் போன்ற இரண்டு செம்மையான திருவடிகளை மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/39&oldid=1551553" இலிருந்து மீள்விக்கப்பட்டது