பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் படுத்திவிட்டோமே.நரம் வைத்ததுதான் சட்டம். ஆரியர் முன்னேற்றம் உன்னிடந்தான் இருக்கிறது. வெற்றியோடு திரும்புவாயானால் சோமரசம் உண்டு நாம் கூத்தாடலாம். சிறையிலுள்ள ஆரியரை வரும்போது மீட்டுக்கொண்டு வந்துவிடுங்கள். சித்ரபானு:- என்னால் கூடியதையெல்லாம் செய்கிறேன். அத்தியாயம் 5. -- 31 இடம்: அரண்மனை அந்தப்புரம். [நள்ளிரவு] பாத்திரங்கள்: பகலாதனும் சித்திரபானுவும் முகமூடியுடன் சிறைச்சாலைக் காவலர் இருவர், இரணியன் லீலாவதி. (முகமூடிகளிருவரும் அரண்மனை மேல்மாடியி லிருந்து சிறைச்சாலையைக் கவனித்தபின் ) ய்ரகலாதன்:- சிறைச்சாலையில் உன் தாய் இருக்கவில் லையே! நீயும் கவனி. சித்ரபானு:- என் வருத்தம் "இன்னும் அதிகரிக்கிறது. சில சமயம் அரண்மனையின் வேறிடத்தில் என் தாயை அடைத்திருக்கக் கூடும். இப்பக்கமாக வாருங்கள் போகலாம். [செல்லுகிறார்கள். பலவிடத்திலும் பார்த்தபின்) ப்ரகலாதன்:- ஜாக்கிரதை! அதோ தெரிகிறது அந்தப்புரம்! அப்பக்கம் போகலாகாது.