பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை 1 2 3

கொண்டாள் - வேல்போன்ற கண்ணைக் கையால் பற்றினாள்; நன்

பாதுளங்கனி ஆயினள் - அழகிய மாதுளங்கனிக்கு ஒப்பாம் முலைகளை 1டையளாயினா ள்.

251

அறைந்துள்ள வாறு செயாரை வினையி னமைத்தலிலான் கிறைந்துள்ள நீடிரு வோன்ராச ராச னெடுங்கிரிவாய் மறைந்துள்ள வாறு பதத்தி னிலைமை வகுத்தறியேன் திறந்துள்ள செப்பீ ரருத்தம் படகிற்றல் தேர்ந்தனனே.

அறைந்துள்ளவாறு - சொல்லியபடி, ஆனை யி ட்ட படி நீள் திருவோன் - பெருஞ் செல்வன்; மறைந்துள்ளவாறு பதத்தின் நிலைமை வகுத்தறியேன் - சொல்லில் மறைந்துகிடக்கிறபடி அதன் .ெ பா ரு ள் நிலையைப் பாகுபட அறியேன்; திறந்து உள்ள செப்பீர் - பொருளை வெளி ப் படுத் து உண்மைப்பொருளை எ டு த் து ச் சொல்லுவீர்; அருத்தம்பட நிற்றல் தேர்ந்தனன் - பொருள் பொருந்தச் சொல் நிற்கும் திறன் தெளிய அறிவேன். மறைந்துள்ள ஆறுபதத்தின் நிலை வகுத்து அறியேன் - ஆறுபதம் - வண்டு, கண் ; கையினால் மறைப்புண்டுள்ள கண்ணின் நிலையைப் பிரித்து அறிய மாட்டேன். திறந்துள்ள செப்பீர் - வெளிப்பட்டுள்ள செப்புப் போன்ற முலையினையுடையீர் அருத்தம்பட நிற்றல் தேர்ந்தனன் - உள்ளக்குறிப்பு .ெ வ ளி ப் ப டு மாறு நிற்பதை உணர்ந்தேன். -

252

தெள்ளு தமிழின் புலவோர்க் கிரும்பொன் றினம்பொழியும் வள்ளன் மு. கிலெனுஞ் சீராச ராச மகிபன் வரைக் கிள் 2ள மொழியி னுலகை விலைக்கொள் கிளரொளியீர் உள்ள தன ம்விட் டலைகை யுறுத லுயர்பிலையே.

தெள்ளுதமிழ் - தெளிவான தமிழ்; இரும்பொன் - மிகுந்தி பொன் : வள்ளல் முகில் மேகம் மழை பொழிவது போல மிகுதியாய்க் கொடுக்கும் வள்ளலாகிய மேகம்; மகிபன் அரசன்: கிள்ளை மொழி - கிளிபோன்ற மழலைப் பேச்சு; உலகை விலைக்கொ ள்ளுதல் - உலகத்தாரைத் தம் வசமாக்குதல்; கிளர் ஒளியீர் - பொங்கும் ஒளியினையுடையீர்; உள்ள நனம் விட்டு கையிலுள்ள பொருளைத் தொலைத்து விட்டு அலைகை