பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 இராசராச சேதுபதி

விழித்திருத்தலை விரும்பினேன், ஆனால் நீ உறங்குதலைத் தந்தாய் என்பது வெளிப்படை, விளித் தலை வேண்டினன் - கண்ணை முற்பட விரும்பினேன்; தலைவி கண்மூடியுள்ளமையால் விழித்தலை வேண்டி னேன் என்றான்; துரங்கல் - யானை, முலை.

271

காவா யிருந்து புவிக்கருள் பாற்கரன் கண்டதவக் கோவா யிரும்புவி யாளராச ராசன் குலவரைவாய் காவா யிருந்து மிருந்தன மென்று கனர்களம்மா ஆவா விருந்த கடலிணங் காத வமயத்திலே.

கா கற்பகச்சோலை; தவக்கோ - தவப்புதல்வன்; ந | வ ா ய் - கப்பல்; தனம் - செல்வம், முலை; ந ண ர் க ள் - நண்ணார்கள். பொருந்தார்கள்; ஆவா இருந்த - ஆக்கத்திற்குரியதாயிருந்த, கடல் இணங்காத சமயம் - கடல் ஒத்து வாராத காலம்; கடல் கொந்தளிப்பா யிருந்தால் கப்பலைச் செலுத்திப் பிற இடங்களிலிருந்து செல்வம் தேட இயலாது என்பது வெளிப்படை. நா - நடு. நாவாய் இருந்தும் - நடுவிடத்தில் அதாவது மார்பிடத்திலிருந்தும்; நா வாய் என்பதற்கு நாவாய்ப்பறை என்று கொண்டு அப்பறை போன்ற முலை என்றும் கொள்ளலாம். கடல் இணங்காத அமையம் - கடல் போலும் கண்ணைத் திறந்து காட்டாத காலம்.

272

சுரும்பாக் கியதள வாரத்தன் வென்றித் தொடைபுனேயும் இரும்பாக் கியபடைச் சீராச ராச னெழிற்புகலூர்க் கரும்பாக் கியமொழி மாதரசே யின் கண் காண்டலின்றேல் அரும்பாக் கியமுலே யாகல முற்று மடைந்துமென்னே.

சுரும்பு - வண்டு; த ள வ | ர த் த ன் - முல்லைமாலையுடையவன்; வென்றித் தொடை - வெற்றிமாலை; இரும்பு ஆக்கிய படை - இரும்பி னால் செய்யப்பெற்ற ஆயுதம்: புகலூர் - இராசராசன் ஆளுகைக்குட் பட்ட ஊர்களில் ஒன்று கரும்பு ஆக்கிய மொழி - கரும்புபோல் இனிக்கும் சொல்; மாதரசு - பெண்கள் நாயகம்; இனிய கண்பார்வை இல்லையேல் அரும்பாகத் தோற்றமளிக்கும் முல்லைப்பூவினால் ஆம் நன்மை முற்றும் பெற்றும் பயன் இல்லை என்பதாம். அரும்பு ஆக்கிய முலை - தாமரை அரும்பு போன்ற முலை.