பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இவ்வளவில் போர்க்களஞ்சென்ற ஒற்றர்கள் மீண்டு வந்து நடந்தவற்றைக் கூறினார்கள். அது கேட்ட இந்திரசித்தன் ஒன்றுமே கூறவில்லை; வாய் பேச இயலாது நின்று விட்டான். எதிரே நிற்கும் இராவணனும் இராவணனாகப் பேசவில்லை. ஒரு சாதாரண மனிதன் தன் செயலொடுங்கிய நிலையில் எவ்வாறு பேசுவானோ, அவ்வாறே பேசினான். இராவணன் பேச்சைவிட மேகநாதன் அமைதியே சிறந்தது. தான் சிறிதும் எதிர்பாராத முறையில் திடீரென்று நிகழ்ந்த இச்செயலால் மேகநாதன் பேச்சற்றுவிட்டான். சிறந்த வீரனாதலின், அது குறித்துப் புலம்பவில்லை. தான் பெரிதெனமதித்த படைக்கலம் பழுதடைந்தமையான், பகைவர் மாட்டுக் கொண்டிருந்த மதிப்பே உயர்ந்தது. ஆனால், இராவணன் கூறிய சொற்கள் அவனுக்கே மதிப்பைக் தருவனவாயில்லை. து.ாதுவன் மீண்டும் வந்து கருடனது உதவியால் நாகபாசம் வன்மை இழந்தது என்ற உண்மையை இருவரும் இருக்கும் பொழுதுதான் கூறினன். ஆனால், இராவணன் யாது கூறுகிறான்? இன்னும் தன் பகைவர் எத்தகையவர் என்பதை அவன் அறிந்து கொள்ள வில்லை; அதனை அறிந்து கொள்ள முயலவுமில்லை. மேகநாதன் எய்த நாகபாசத்தை நீக்கக் கலுழன் வந்தது இராம இலக்குவரது தவம் முதலிய வலியால் என்பதையும் உணரவில்லை. அறிவுடையவன் அங்ங்ன மன்றோ நினைத்திருக்கவேண்டும்? கலுழன் தன்னை யும், தன் மதிப்பையும் சட்டை செய்யாது இலக்குவன் உதவிக்கு வர வேண்டுமேயானால், இலக்குவன்