பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கந்தனார் தந்தை யாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட எந்தையார் அரசு செய்வது இப்பெரும் பலங்கொண்டேயோ ? மனிதருக் கடிமை யாய்நீ இராவணன் செல்வம் ஆள்வாய், இனியுனக் கென்னோ மானம்! எங்களோடு அடங்கிற் றன்றே ? (கம்பன் - 9099, 9100) தன் தந்தை இறப்பது தவறாது என்ற எண்ணம் முன்னமே இந்திரசித்தற்குத் தோன்றிவிட்டது. தந்தை வேண்டுமானால் தன் தவற்றைத் திருத்திக் கொள்ள லாமே தவிர, அவனுக்கு விரோதமாகத் தான் ஒன்றும் செய்தலாகாது என்னும் உறுதி பூண்டவனாகலின், மீண்டும் வீடணனை அவன் நோக்குகிறான்; நோக்குந் தோறும் தவறு செய்தவனாகிய தன் தந்தையின் பெருமையையும் வீடணனை அவன் நோக்குகிறான்; நோக்குந்தோறும் தவறு செய்தவனாகிய தன் தந்தையின் பெருமையையும் வீடணன் சிறுமையையும் ஒப்பு நோக்குகிறான். அறம் காரணமாகத் தவறு செய்த தமையனை விட்டுத் தம்பி பிரிந்ததைக்கூட மேகநாதன் பாராட்டவில்லை. ஆனால், தன் குலம் முழுவதற்கும் தீங்கு செய்த பகைவர் யாராயினும்சரி, அவர்களோடு சேர்ந்து கொண்டு தன் குலத்தையே அழிக்க வழி தேடிய தகைமையை அவன்ால் பொறுக்கக் கூடவில்லை. அண்ணன் தவற்றை வெறுத்தானாயின், இன்று தானா அண்ணன் தவறு செய்ய முனைந்தான்? தேவரைச் சிறையிட்ட காலந்தொட்டே அண்ணனிற் பிரிந்திருக்கலாமே? அறமுடையார் பக்கம் வெற்றி தானே சென்று எய்துமாறு இருந்திருக்கலாமே! அவ்வாறெல்லாஞ் செய்யாது இராவணன் குலத்தின் தீராப் பகைவரோடு சேர்ந்து அவன் குலம் அழிவதற்கு வேண்டிய வழிகள் உபாயங்கள் அனைத்தையும் கூறி,