பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 99 என்று வேண்டிப்பெற்றனையாயினும், மனிதர் களால் அழிவு நேரக்கூடாது' என வரம் வேண் டிற்றிலை. அவர்கள் மாட்டு எவ்வாறு இப்பொழுது வெற்றிகிட்டும்? இதற்குச் சான்றும் வேண்டுமெனில், கார்த்தவீரியார்ச்சுனனிடம் நீ தோல்வி எய்தியதே சாலும்." "கயிலை மலையை நீ தூக்கியபொழுது, நந்திதேவர் தந்த சாபத்தால், விலங்கொன்று உன்னை வெல்லும் என்பதை அறிவோம். அதற்குச் சான்றாக வாலியினிடத்து நீ தோற்றமையை அறிவோம்.” "முன்னர் வேதவதிபால் நீ தகாததுசெய்து, அதன் பயனாய் அவள் தீக்குளிக்கையில், மறு பிறப்பில் உனது அழிவுக்குக் காரணமாவேன்!" என்று கூறி இறந்தாள். அவளே இப்பொழுது சீதையாய்த் தோன்றினாள்:” இம் மூன்று காரணங்களும் வீடணன் எடுத்துக் காட்டியவை. இன்னும் அவன் கூறியன வருமாறு: "மேலும், இப்பொழுது நினக்குப் பகைவராய்த் தோன்றி நிற்பவரையும் நீ நன்கு அறியவேண்டும். இவர் களோ, முனிவரும், அமரரும், முழுதுணர்ந்தவர்களும், முற்றும் மற்றும் நினைவதற்கரியவராவார்கள். இவர்கள் தங்கள் வினையினால் மனிதராய் எளிதின் இங்குத் தோன்றி நின்றார்கள்; கோசிகன், நான்முகன், இறைவன் முதலானோர் தந்த படைக்கலங்களை ஏந்தி நிற்பவர்கள்; திருமாலது அரியவில்லையும், இறைவன் திரிபுரம் எரித்த அம்பையும், குறுமுனிவராகிய அகத்தியர் தர, பெற்று நின்றார்கள். இவர்களை நீ