பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இராமன், கம்பன் ஆக்கிய இராமன் ஆவான்; அவ்வாறே இராவணனும். 'அவன், ஆரியனா தமிழனா? என்பது போன்ற வினாக்களும் இடப் பொருத்தம் அற்றவையே. இத்தகைய வினாக்களை விட்டுவிட்டு, இராமாயணத்தை ஒரு காப்பியமாகக் காண்பதே சரியான முறையாகும். மேல் நாடுகளில் தோன்றிய 'சுவர்க்க நீக்கம், உலிசிஸ் போன்ற காப்பியங்களுடன் ஒத்த இயல்புடையதாகும் கம்பராமாயணம். இராமனைப் படைத்த அந்தக் கம்பனே இராவணனையும் படைத்துள்ளான், யாரை உயர்ந்தவனாகக் கலைஞன் செய்கிறான் என்பதன்று நாம் காணவேண்டும் பொருள். அவ்வாராய்ச்சியில் ஈடுபட்டால் உண்மை காண்பதை இழப்பதோடு, கம்பன் எதைக் கருதவில்லையோ அதைத் தேடுபவர் களும்ாகிவிடுவோம். ஒவ்வொருவரையும் அவர வருடைய சூழ்நிலையிலும், பிற சூழ்நிலையிலும் வைத்துக் காட்டுகிறான் கம்பன். சிற்சில இடங்களில் மிக உயர்ந்த பாத்திரங்களாகக் காட்சியளிப்பவர்கள், சிற்சில இடங்களில் மிகத் தாழ்ந்தவர்களாகக் காட்சி யளிக்கிறார்கள். ஏன் அவ்வாறு கலைஞன் செய்கிறான்? மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், நன்மை தீமை என்ற இரண்டு பண்பும் கலந்தவனே தவிர, முழுவதும் நன்மையை உடையவனாகவோ, இவ்வுலகில் இருத்தற்கில்லை. இவ் உண்மையை அறிவுறுத்தவே, கலைஞன் எல்லாப் பாத்திரங்களையும் எல்லாச் சூழ்நிலையிலும் வைத்து நம்மைக் காணுமாறு செய்கிறான். பெரும்பாலும் மனிதன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் சூழ்நிலையைப் பொறுத்தே ஆம். இராவணனாகிய அவலத் தலைவனும், சூழ்நிலை