பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தன்னம்பிக்கைக்கு எல்லை கற்பிக்க முடியுமா? இவ்வாறு அளவற்ற நிலைக்கு அது பரந்துவிட்ட காரணத்தாலேதான் இராவணன் தோல்வியடைய நேர்ந்தது. உயர்ந்தோர்க்குரிய இப்பண்பை இராவணன் மிகப்பெற்றிருந்தான் எனக்காட்டு வதோடு, கவிஞன், அஃது எல்லையைக் கடந்தால், நல்லதேயாயினும் தீமையைப் பயந்துவிடும் என்ற உண்மையையும் நிலைநாட்டி விட்டான். சிறந்த ஒரு பண்பாயினும் எல்லையற்றுச் சென்றமையின், இந்நற்பண்பே அவன் அவல வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. இராவணன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அவனுடைய கோபமும் கொடுமையுமே நமக்கு நினைவுக்கு வருகின்றன. இவ்விரண்டையும் மிகுதியாகப் பெற்றிருந்தவன், அன்புக்கும் உறை விடமாய் இருந்தான். அவனுக்குத் தன் சுற்றத்தாரிட மிருந்த அன்பு அளவுகடந்தது என்பதில் ஐயமில்லை. தம்பியையும் மகனையும் அவன் கடிந்துகொள்ளு கின்றான். ஆயினும் அவர்களிடத்து மிக்க பரிவுடைய வனாயும் இருந்தான். மகோதரன் யோசனைப்படி, கும்பகருணனைக் கூப்பிட்டு போருக்குச் செல்' என்று உத்தரவிட்டபொழுது கும்பகர்ணன் அண்ணனுக்குப் பல நீதிகளை எடுத்துக் காட்டுகிறான். சீதையின் மீதுள்ள காமம் காரணமாகத் தனக்கு உறுதி கூறும் தம்பியை இராவணன் நன்கு அறிந்துகொள்லாமல், 'வீடணனைப்போல நீயும் இராமனைப் பணிந்து உயிர் வாழ்வதை நான் தடைசெய்ய விரும்பவில்லை என்று கூறுகிறான். இதனால் கும்பகருணன், இறப்பதை இராவணன் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அவனைப் போருக்கு அனுப்பிய பொழுது அவன்