பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் முறைப்படி செய்யுமாறு பணிக்கிறான். இவ்வளவும், வேறெவரும் போருக்குச் செல்ல இல்லையாகையால் செய்கிறானேயொழிய, இன்னும் இராவணன் இராமனைத் தனக்கு ஏற்ற பகைவனாகக் கருதிச் செய்யவில்லை. மூல பலம் அழிந்தது எனத் தூதுவர் வந்து சொல்லினர். இராவணனுக்கு இதை நம்ப முடியவில்லை. என்னினும் வலிய ரான இராக்கதர் யாண்டும் வியார் உன்னினும் உலப்பி லாதார் உவரியின் மணலின் நீள்வார் பின்னொரு பெயரு மின்றி மாண்டனர் என்று பேசும் இந்நிலை இதுவோ ? பொய்ம்மை விளம்பினர் போலும் ! என்றான் (கம்பன் - 9628) துதுவர் இந்நிலையில் பொய் சொல்லுவரா? இராவணன் இன்னும் பகைவன் வல்லமையைப் பொருட்படுத்தாததே, அவனை இவ்வாறு கருதச் செய்கிறது. மேகநாதன் அழிவு தந்த அதிர்ச்சியினும் இவ்வழிவு இராவணனுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. 'என்னினும் வலியரான இராக்கதர் அழிவுற்றார் என்றால் எனத் தொடங்குவது, அவன் முதன் முதலாகத் தன் வல்லமையில் ஐயமுறுகின்றான். என்பதைக் தெரிவிக்கின்றது. அவன் கோபுரத்தின் மீதேறி மூல பலம் இறந்த உண்மையைக் காண முற்படுகிறான்; . - - - ஊறின சேனை வெள்ளம் உலந்தபே ருண்மை யெல்லாம் காறின உள்ளம் நோவக் கண்களால் தெரியக் கண்டான்.