பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் ஈசனை இமையா முக்கண் இறைவனை இருமைக் கேற்ற பூசனை முறையின் செய்து திருமறை புகன்ற தானம் வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் ஆசற நல்கி ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவ தானான். (கம்பன் - 9642) இதுவரை மும்மூர்த்திகளைக் காட்டிலும் தான் வல்லமையுடையவன் என்ற செருக்கிற்பட்டுத் துன்பத்திலேயே உழன்றவன், இப்பொழுது இறுதிப் போருக்குச் செல்லுமுன் சிவனைப் பூசை செய்கிறான். இம்மையில் இதுவரை வந்த தீவினைகளுக்குப் பரிகார மாகவும், மறுமையில் நற்பயனடையவும் இப் பூசையைச் செய்ததால் இராவணன் பொறுமையோடு முறை தவறாமல் நடந்து கொள்கிறான். அனைத்தையும் இழந்த பின்னர், பகைவன் மதிற் புறத்தே இருக்கையில், இராவணன் இவ்வளவு பொறுமையுடன், கலக்கம் சிறிது மின்றிப் பூசை செய்வது அவனது மேம்பட்ட மனத் திண்மையையே காட்டுகிறது. இத்தகைய மனவன்மையையுடையவன் எங்கனம் தோல்வியடையக்கூடும்? தோல்வி நேரலாம் என்ற எண்ணத்துக்கும் இராவணன் இன்னும் இடமளிக்கவில்லை. வெற்றி வேண்டும் என்ற எண்ணத்துடனும் அவன் இப்பொழுது போருக்கெழவில்லை. பகைவனுக்குப் பயப்படவில்லை என்ற புகழை நிலை நாட்ட வேண்டும் என்ற ஒர் எண்ணமே அவன் மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. வெற்றி எய்தினால், அதனால் அவன் மகிழ்ச்சியடைப் போவதில்லை. தம்பி, மகன், சுற்றத்தார். இவ்வனைவரையும் இழந்த பிறகு சானகி யையும் பெறாமலிருக்கையில் வெற்றிக் களிப்புக்கு இடமேது? ஆகவேதான் இப்பொழுது செய்யும்