பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'உணர்தல்' அத்தகையதன்று அறிவால் அறிந்து, மனத்தால் விரும்பப்படும் ஒன்று. சிந்தையில் சென்று தங்கும் பொழுதே உணர்தல் தன்மையில் அடங்கு கிறது. எனவே, ஒரு பொருளை அறிதலுக்கும் உணர் தலுக்கும் கடலத்தனை வேற்றுமை உண்டு. கவிஞனே இவ்வேற்றுமை நயம் தெளிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இதனை நன்குணர்ந்த கம்ப நாடன், இராவணன் கற்றது வெற்று ஏட்டுக் கல்வி யன்று என்று கூறுகிறான்; அவன் கல்வி வாழ்க்கை யோடு ஒன்றியது என்று சொல்லுகிறான். மறை, பொருளோடு அறியப்பட்டு, அது வாழ்க்கையில் இரண்டறக் கலக்கும் பொழுது உணர்தல் தன்மை யைக் கிட்டுகிறது, இதனாலேயே "ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்' என்று கும்பகருணன் சொல்லுகிறான். கல்வியின் பயன் இதுவேயாகுமாதலின், இஃது இல்வழிக் கல்வி பயனற்ற தாய் முடியும். இங்ங்ணம் வாழ்க்கையில் ஒன்றாது நிற்கும் கல்வி மனிதனுக்கு நன்மை செய்வதன் றெனினும் தீமை செய்தே தீரும். வீணான தருக்குக் கொள்ளவும், ஆராயாது வினை செய்யவும், தொட்டதி லெல்லாம் ஐயங் கொள்ளவும் செய்யுமாகலின், அக்கல்வி வேண்டா என்று கூறவந்த தாயுமான அடிகள் 'கல்லாத பேர்களே நல்லவர்கள்' என்று கூறிப் போந்தார்; அங்ங்னம் கூறுவதன் கருத்தையும் பின்னடியில் 'கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்வேன்! எனக் கூறிவிடுகிறார்; எனவே, கல்வியின் முடிந்த பயன் வாழ்க்கைக்குப் பயன்படுவதாயும், வாழ்க்கையில் ஒன்றக் கூடுவதாயும் இருக்க வேண்டும் என்பது ஒருதலை. இக்கருத்தை உள்ளடக்கியே உணர்ந்து அறிவு அமைந்தாய் என்று