பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தீயினை நயந்தான் 77 எத்தனையோ அறவுரைகள் எடுத்துக் கூறியும் அவற்றைக் கேட்கும் மதி அவன்பாலில்லை; தன்னையும் தன் குலத்தையும் அழித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டான். அருமந்த குமரனையும் பலியிடத் தீர்மானித்துவிட்டான்: ஒழிந்தார் எல்லார்க்கும் பிதிர்க் கடன் இயற்றவாவது ஒருவன் வேண்டாவா? எத்துணைத் தவறு செய்யினும் உடன். பிறந்தார் மாட்டு நீங்காத காதலுடையவன் கும்பகருணன், இராவணன், வீடணன் என்ற இருவரும் இருவேறு முறைகளில் தவறு செய்கின்றனர். ஆனாலும், தவற்றை விட்டு அவர்கள்பால் அன்பு செலுத்தும் தன்மை உடையான் கும்பகருணன். ஆனால், இராவணன் அன்பு அவ்வளவு உயர்ந்ததன்று. அன்புடையனாயினும் தன் காரியத்திற்கு அவர்கள் குறுக்கே நிற்கிறார்கள் எனக் கண்டால், அதனைப் பொறுக்கமாட்டான். இத்துணை அன்புடைய கும்ப கருணனையே மனம் உளையுமாறு பேசி விட்டானல்லவா இன்னும் உயிரினும் இனிய மேக நாதனைக் கூட அவ்வாறே பேசுகிறானே! ஏன்? தன் கருத்துக்கு மாறாக அறவுரை கூறினமைக்கே அவ்வளவு கடிந்துகொள்வானாகில், முழுப் பகைவன் பால் சென்று சேர்ந்துகொண்டு அண்ணனுக்குப் பகையாகச் சூழ்ச்சியும் செய்கிற வீடணனைக் கண்டால் சும்மா விடுவானோ! அங்ங்னம் அவனை விடாமற் கொல்லினும் இராவணனைப் பெருந் தவறு செய்தான் என்று கூறவியலாதே! அத்தகைய நிலை நேராதிருக்கவே கும்பகருணன் இராமனிடம் வரம் வேண்டுகிறான். எனவே, கும்பகருணன் கண்டும் பேசியும் பழகிய இராவணன் எத்தகையவன்? அவன் குண நலங்கள்