பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள், நாடு பல் வற்றைத் தாக்கி,அரசு பலவற்றைக் கவிழ்த்து, பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தது; கொடுமை என் பதற்கு வாதங்கள் தேவையா? மகனை இழந்த தாயின் கண் ணீர் போநாதா! தந்தையை இழந்த மதலையின் கதறல் போதாதா! தாலி இழந்த தையலரின் தவிப்புப் போதாதா! எனின்— எத்தகைய போரிலும்--அறம் காத்திட, உரிமை பெற்றிட - மானம் காத்திட- நடத்தப்படும் போரிலும், நெஞ்சு நெக்குருகச் செய்யும் இவை காணப்படுகின்றன! எனவே, இவைகள் காணப்படும் போர் கொடுமை நடத்தப் பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான சான்று என்றால், எனவே எல்லாப் போரிலும் இவை நேரிட்டு விடுகின்றன. இவைகளைக் கொண்டு, கேடு எது என்று கண்டறிய இயல வில்லை. எனவே, சிக்கல் நிரம்பிய பிரச்சினை, கேடு எது என் பதனைக் கண்டறிவதே! இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிடச் செய்ததே கேடன்றோ, கொடுமையன்றோ, அக்ரமமல்லவோ, அநீதி யன்றோ!-- என்போருக்கு, ஆம்! ஆம்! இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று! மறுக்கவில்லை! ஆனால், கேடுகளைக் களைய, மீண்டும் கேடுகள் ஏற்படாமலிருக்கும் வலிவான ஓர் நிலைமையை ஏற்படுத்தவேண்டும் என்றநோக்கத்துடனேயே, இரத்தம் பொங்கிட இருபது ஆண்டுகள் போர் நடாத்தி னேன் - வெறும் வெற்றிகளுக்காக அல்ல-விருதுகள் பெற அல்ல-வெறியினால் அல்ல! போர் நடாத்திப்,பொல்லாங்கு மூட்டவல்லவர்களை அடக்கி ஒடுக்கி, ஒருபெரும் பேரரசு அமைத்து, அந்தப் பெரும் பேரரசின் கீழ் எல்லா மக்களும் வாழ்ந்து, வளம்பல பெற்று, நீதி நிலைத்திட, நிம்மதி ஓங் கிடத்தக்க நன்னிலை பெறவேண்டும் என்ற நோக்கமே கொண்டேன் - என்றுதான், இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிட வைத்த இணையில்லாப் போர் வீரன், தளர்வு காட்டாத படைத்தலைவன், அச்சமற்ற பெருவீரன், ஆற்ற லுக்குத் தனி இலக்கணம் வகுத்துக் காட்டிய அருந்திறன்